புலமைப் பரீட்சையில் மருதமுனை அல் -ஹம்றாவில் 19 பேர் சித்தி

இவ்வாண்டு நடை பெற்ற  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில்  மருதமுனை  அல் -ஹம்றா  வித்தியாலயத்தில் 100 மாணவர்கள் தோற்றியதில்  19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் அதிக எண்ணிக்கையான  மாணவர்கள் பெற்றுள்ளனர் .
கல்முனை முஸ்லிம்  கோட்டத்தில்  அதிகூடிய  182 புள்ளிகளைப் பெற்ற பாடசாலை என்ற பெருமையும் அல்  ஹம்றாவுக்கு  கிடைத்துள்ளதாக  பாடசாலையின்  அபிவிருத்திக்கு குழு செயலாளர் நளீம் எம்.பதூர்டீன் தெரிவித்தார் .
மேலும்  இப்பாடசாலையின்    அபிவிருத்திக்கு குழு செயலாளர் நளீம் எம்.பதூர்டீன் ஆசிரியை மிஹ்றூனா ஆகியோரின்   புதல்வரான  ,   பதூர்டீன் மிஷால் அஹமட் 172 புள்ளிகளைப்  பெற்று சித்தியடைந்துள்ளார் .
சித்தியடைந்த மாணவர்களுக்கும்  ,இப்பரீட்சைக்கு  தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் ,இவர்களை வழிப்படுத்தி புள்ளிகளால் புள்ளிகளாக்கிய  அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் தங்கள் கால நேரங்களை கல்விக்காக அர்ப்பணித்த பெற்றோர்களுக்கும் அத்துடன் வலயக்  கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி   பணிப்பாளர் ஆகியோருக்கும்  அபிவிருத்திக்கு குழு செயலாளர் நளீம் எம்.பதூர்டீன்  நன்றிகளை தெரிவித்துள்ளார் .

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்