Posts

கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பு வைய மாணவர்களுக்கு உதவி

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச வறிய மாணவர்களின் கல்வித்தாகத்தை போக்கி அவர்களின் வாழ்க்கையில் எழுச்சியை உண்டு பண்ணும் நோக்கில் பாடசாலைகளின் வறிய மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. கல்முனை விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கே.தயானந்தன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பின் பிரதித் தலைவரும் கல்முனை பெரியபள்ளிவசல் பேஷ் இமாமும்மான எம்.சி.ஏ.சமட் மௌலவி பிரதம அதிதியாகவும்,அமைப்பின் செயலாளர் எஸ்.எல்.எம்.இப்றாஹிம் கௌரவ அதிதியகவும் கலந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரங்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மேற்படி அமைப்பின் அங்கத்தவர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்முனை மனித வள அபிவிருத்தி அமைப்பானது இன,மத போங்கள் பாராது கல்விக்கு   அதிக முக்கியத்துவத்தை கொடுத்து  செயற்பட்டு வரும் அமைப்பானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Image
(பி.எம்.எம்.ஏ.காதர் ) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  20 ஆவது  ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு  25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு   நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் கலை வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர்  வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதன் போது  சிரேஸ்ட> கனிஷ்ட  ஊடகவியலாளர்கள் 24 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர் இவர்களின் விபரம்:- (01)ஏ.எல்.ஜீனைதீன் (02)பி.எம்.எம்.எ.காதர் (03)ஐ.எல்.எம்.றிஸான் (04)யூ.எம்.இஸ்ஹாக்; (05)நழீம் எம் பதுறுத்தீன் (06)எம்.ஐ.எம்.வலீத் (07)ஏ.எல்.எம்.முஜாஹித் (08)ஏ.புஹாது  (09)எம்.பி.அஹமட்ஹாறூன் (10)ரி.கே.றஹ்மத்துள்ளா (11)எம்.ஐ.அன்வர் (12)ஏ.ஜே.எம்.ஹனீபா    (13)ஜெஸ்மிஎம்மூஸா (14)ஏ.எல்.றமீஸ் (15)எம்.சி.அன்சார் (16)எம்.ஐ.எம்.றியாஸ்...

மன உளைச்சல் அப்துல்லாவும் ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் கௌரவிப்பும்

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிதி மோசடி என்ற தலைப்பில்  Srilanka Muslim  இணையத்தில் வெளியாகி உள்ள  செய்திக்கான  விளக்கம் - சம்மேளனத்தின்  பொருளாளர்  யு.எம்.இஸ்ஹாக்  முதலில் நான் தெரிவித்துக் கொள்வது இந்த அப்துல்லா என்ற ஊடகவியலாளர் எமது சங்கத்தில் உள்ளவராக இருந்தால்  அவர் முள்ளந்தண்டுள்ள ஆண் மகனானால்   எங்களுடைய சம்மேளனக் கூட்டம்  நடை பெற்ற போது இவற்றை எல்லாம் கேட்டு தெளிவு கண்டிருக்கலாம் . இவ்வாறான செய்திகளை அனுப்பும்  போலிப் பெயர் வழி  காரர்களின் செய்திகளை பிரசுரிக்கும் இணையங்கள்  இதன் உண்மை தன்மையை  உறுதிப் படுத்திய பின்னர் வெளியிட வேண்டும்  அது தொடர்பாக  சம்பந்தப் பட்டவர்களின் கருத்தையும் கேட்டு பிரசுரிக்க வேண்டும் . என்பது எனது தயவான கருத்து . அப்துல்லா செய்தியாளனாக இருந்திருந்தால் அவர் எமது சங்கத்தில் அங்கத்தவராக இருந்திருந்தால் இதனை என்னிடம் கேட்டு தெரிந்திருப்பார் . அப்துல்லா சொல்வது போன்று  மீரா இஸ்ஸதீன் சம்மேளனத்தின் தலைவர் திருகுதாள  வேலை  செய்வதற்கு  பொர...

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பிரதிப் பணிப்பாளராக-எம்.பிர்னாஸ் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Image
அபு அலா - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாகாண பிரதிப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.பிர்னாஸ் இஸ்மாயில்  இலங்கை நிருவாக சேவை தரம் இரண்டுக்கான பதவிக்கு   பதவி உயர்வுபெற்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை நேற்று  திங்கட்கிழமை காலை (21) திருகோணமலை நகரில் அமைந்துள்ள மாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த சிவப்பிரியா வில்வரத்தனம் கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச்சென்றுள்ளமையை அடுத்து  ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்று சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை மெதடிஸ்த தேவாலயத்தின் கிறிஸ்து பிறப்ப இன்னிசை வழிபாடு

Image
கல்முனை மெதடிஸ்த தேவாலயத்தின்  கிறிஸ்து பிறப்ப இன்னிசை வழிபாடு  நேற்று (20) காலை  ஆலய முகாமைக் குரு  அருட் திரு  J W .ஜோகராஜா  தலைமையில்   நடை பெற்றது.

நற்பிட்டிமுனை லாபீர் முன்பள்ளிப் பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா

Image
நற்பிட்டிமுனை லாபீர்  முன்பள்ளிப்  பாடசாலை  வருடாந்த பரிசளிப்பு விழா இன்று  (20)   பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில்  லாபீர் வித்தியாலய பிரதான மண்டபத்தில்  இடம் பெற்றது . பழைய மாணவர் அமைப்பின் சார்பில் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.ஆஸாத்  தலைமையில்  இடம் பெற்ற இவ்விழாவில்  தென்கிழக்குப் பல்கலைக்கழக  சிரேஸ்ட விரிவுரையாளர்  கலாநிதி எச்.எம்.எம்.நளீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .  கௌரவ அதிதியாக   கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹ்பர்  , வலயக் கல்வி அலுவலக திட்ட உத்தியோகத்தர்  சி.எம்.நஜீப் , லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.எம்.அஸ்ரப் , பகுதி தலைவர் மௌலவி .எம்.ரீ.ஏ.மனாப் ஆகியாகியோரும் கலந்து சிறப்பித்தனர் . அங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற்றது. அறிவிப்பாளர்  வீ.எம்.மக்பூல்  தொகுப்பில்  நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப் பட்டு  சிறப்பாக நடைபெற்றன . ...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்துக்குள் சதி

Image
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் 20வது ஆண்டு விழா தொடர்பாக ஜப்னா முஸ்லிம்  இணையத்தளத்தில்  வெளியான செய்தி தொடர்பாக  சம்மேளனத்தின்  பொருளாளராகிய யு.முஹம்மட்  இஸ்ஹாக்  தரும் விளக்கமாவது. முதலில்  இந்த செய்திக்கு உரிமையாளரான அப்துல்லாஹ் என்பவர் யார் ? இவர் அம்பாறை மாவட்டத்தில்  ஒரு ஊடகவியலாளரா ? அல்லது  எமது சம்மேளனத்தின் ஒரு உறுப்பினரா ? என்பது  தெளிவற்றது.  கடந்த மாதம்  அட்டாளைச்சேனை பிரதேச சபை  மண்டபத்தில்  நடை பெற்ற மாதாந்த பொதுக் கூட்டத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன்  அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போது எமது சம்மேளனத்தின் 20 ஆண்டு நிறைவு விழாவை  கொண்டாடும் முகமாக  இதுவரை சம்மேளனத்தில் கௌரவிக்கப் படாத ஊடகவியலார்களை கௌரவிக்க வேண்டும் இதற்காக  சம்மேளனத்தின்  அனுமதியை கோரினார். கூட்டத்தில் கலந்து கொண்ட 32க்கும் மேற்பட்டவர்கள்  அதற்கான முழு அதிகாரத்தையும் தலைவருக்கு வழங்கி இருந்தனர் . அதன் அடிப்படையில் தலைவர் மீரா இஸ்ஸதீன் அந்த நடவடிக்க...

சேனைக்குடியிருப்பு சேவோ அமைப்பின் 15ஆவது ஆண்டு பூர்த்தி விழா

Image
யு.எம்.இஸ்ஹாக்  அம்பாறை மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரச சார்பற்ற நிறுவனமான  சேவோ  அமைப்பின் 15ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும் , பிரதேச முன் பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும் ,பரிசளிப்பும்  சேனைக்குடியிருப்பு சேவோ  நிலையத்தில் இன்று இடம் பெற்றது. சேவோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் , கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.லேபில் யு.ஏ. கப்பார் , ஓய்வு பெற்ற அதிபர் கே.சந்திரலிங்கம், கல்முனை ஸ்ரீ சுபதிரா  ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முத்துகல சங்கரத்ன   ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு  உரையாற்றியதுடன் முன் பள்ளி சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கி வைத்தனர் . சிறார்களின் கலை நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றதுடன்  நீண்டகாலம் சேவோ நிறுவனத்தில் பணியாற்றும் எம்.ரசிலாவதி என்பவர் பொன்னாடை விருது  வழங்கி கௌரவிக்கப் பட்ட நிகழ்வும் அங்கு இடம் பெற்றது.