நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கல்முனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று (06) கல்முனை பிரதேச செயலகத்தில் நடை பெற்றது . பிரதேச செயலாளர் மங்கள விக்கிரமாராட்சி மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பிரதி அமைச்சர் அனோமா கமகேயின் இணைப்பாளர் ஏ.எச்.எச்.ஏ.நபார் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் ,விவசாயப் பிரதிநிதிகள் , உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் . இதன் போது கல்முனை பிரதேசத்தில் உள்ள விவசாய நீர்பாசன குளங்களில் காணப் படும் குறைபாடுகள், சேதமடைந்த வீதி புனரமைப்புக்கள் , மேலும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு செலவில்லாமல் அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்தல் , சமுர்த்தி பெற தகுதி இருந்தும் உதவி பெறாதவர்களுக்கு சமுர்த்தி உதவி வழங்கல் , போன்ற பல விடயங்கள் ஆராயப் பட்டு 100 நாள் அபிவிருத்தி திட்டத்துக்குள் உள் வாங்கப் பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் விவசாயப் பிரதிநிதிகளால் முன் வைக்கப் பட்ட பாரிய நீர்ப்பாசனப் பிரச்சினை தொடர்பாக நீர் பாசன பிரதி அமைச்சர் அனோமா கமகேயின் கவனத்துக்கு கொண்டு வந்து உடன்