Posts

Showing posts with the label Grow

புதிய தேர்தல் சட்டமூலத்தில் சிறுபாண்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கான யோசனைகள்

Image
டாக்டர் வை.எல்.யூசுப்  புதிதாக நடைமுறைப் படுத்துவதற்கு முன் மொழியப்பட்டுள்ள தேர்தல் சட்டமூலமானது தற்போதுள்ள விகிதாசாரமுறையில் விருப்புவாக்கு அகற்றப்பட்டு மேலும் 29 அல்லது 30 ஆசனங்களை புதிதாக தேசிய விகிதாசார பிரதி நிதித்துவம் எனும் ஒரு பிரிவுமுறைக்கு ஓதுக்கப்பட்ட ஒரு தேர்தல்முறையாக சொல்லப்படுகின்றது. அதாவது மொத்த ஆசனங்கள் 255 அல்லது 254 ஆக உயர்வடையும். விருப்பு வாக்கு நீக்கப்படும் போது அதிகூடுதலாக விருப்புவாக்குப் பெற்றவர் என்பதற்கு பதிலாக, அதிகூடுதலான வாக்கைப்பெற்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றவரைத் தீர்மானிக்கும் முறை என்று கூறப்படுகிறது.  இங்கே கவனிக்கவேண்டிய முக்கிய விடயமானது, மேலதிகமாக உள்வாங்கப்படுகின்ற 30 ஆசனங்களின் பெரும் பகுதி தற்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற முறைப்படி ஆகக்கூடுதலான ஆசனத்தைப் பெறுகின்ற பெரும்பாண்மைக் கட்சிக்கே செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதால் அக்கட்சி தனியாக ஆட்சியமைக்கும் தகுதியைப் பெறுமென்றும் சிறுபாண்மைக் கட்சிகளின் பேரம் பேசும் சக்தி இழக்கச்செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காகவும் சிறுப

நற்பிட்டிமுனை அபிவிருத்திக் குழு கண் திறக்குமா!!

Image
பிந்திய தகவல்  குழியில் விழுந்த சிறுமி தனது சின்னஞ் சிறு சகோதரியால் காக்கப் பட்டாள்  ஆறு மாதங்களுக்கும் மேலாக நற்பிட்டிமுனை தச்சர் தெருவில் உள்ள  சிறிய பாலம்  ஒன்று  உடைந்து  போக்குவரத்துக்கு தடையாகவும் இடையூறாகவும் காணப் படுகின்றது. கல்முனை மாநகர முதல்வரை சந்தித்த நற்பிட்டிமுனை அபிவிருத்திக் குழுவினர் இந்த வீதியின் அவலங்கள்   குறித்து பேசினார்களோ என்னவோ தெரியவில்லை .  அபிவிருத்திக் குழுவினர் பேசாவிட்டாலும் அதில் அங்கத்துவம் வக்கிகும் பலரது போக்குவரத்துக்கு பயன்படும் வீதியும் இதுவாகவே உள்ளது . அபிவிருத்திக் குழவின் முக்கியஸ்தரான சி.பீ.ஹாலித்  உடைய தாய் சகோதரிகள்  மற்றும்  ஸ்ரீ.ல.மு.கா  நற்பிட்டிமுனை அமைப்பாளர்  எம்.சி. அமீர்  ஆகியோரது வீடுகள் இப்பாலத்தின் அருகாமையில் உள்ளன . அதே போன்று  ஸ்ரீ.ல.மு.கா நற்பிட்டிமுனை செயலகமும் இந்த வீதியின் முடிவில் உள்ளது . இவ்வாறு இருந்தும் இன்னும் இவ்வீதியை கவனிக்காமல் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இருந்து கொண்டு  அபிவிருத்திக் குழுவை கல்முனை மேயரிடம் கூட்டி சென்று  கதைத்த விடயம்தான் என்ன . இந்த மக்களின் நன்மை கருதி  மேயராவது  இந

பல்கலைக்கழக அனுமதிக்கு இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம்!

Image
புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள்  இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.    அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியுடைய மாணவர்களுக்கான அனுமதி கையேடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த கையேட்டை மாணவர்கள் நன்கு ஆராய்ந்து பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்கமுடியும்.   இம்முறை நாடளாவிய ரீதியில்  உள்ள பல்கலைக்கழகங்களுக்கு  24,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களை இணைக்க எதிர்பார்த்துள்ளோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேசி லங்கா நிறுவனத்தினால் மருதமுனை பிரன்ஞ்சிட்டி கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது.

Image
(பி.எம்.எம்.ஏ.காதர்) குவைத் நாட்டில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும்  றஹ்மா இன்டநெசனல் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் இலங்கை கிளை நிறுவனமான மேசி லங்கா நிறுவனத்தினால் ஒரு கோடி இருபது இலட்சம் ரூபா செலவில் மருதமுனை பிரன்ஞ்சிட்டி புதிய கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாசல் திறப்பு விழா பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.ஏ.அத்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. இதில் மேசி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் நஸ்ர் ஹஸன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய பள்ளிவாசலைத் திறந்து வைத்தார். மேசி லங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எம்.ஆர்.எம்.முனாஸ் நழீமி ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தினார்.நீண்ட காலமாக தகரக் கொட்டில் ஒன்றில் சிறிய பள்ளிவாசல் இயங்கி வந்தது.  இந்த நிலையில் மேசி லங்கா நிறுவனம் இந்த அழகிய பள்ளி வாசலை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.  இப்பள்ளிவாசல் திறப்பு விழாவில் புதிய பள்ளிவாசலின் நிர்வாகிகள் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிகள்,அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஊர்பிரமுகர்கள் உள்ளிட்ட பெரும் தொகையானோர்  கலந்து கொண்டனர். பிரதம அதிதி

வரும் பொதுத் தேர்தலை விகிதாசார முறையிலேயே நடத்த வேண்டும்

Image
சிறுபான்மை, சிறிய கட்சிகள் கூட்டாக முடிவு தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படியே நடத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் முறைமைமாற்றம் தொடர்பில் அவசர தீர்மானத்தை எடுக்காது ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான இரு தேர்தல் திருத்த யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப் பாட்டுக்கு வருவது எனவும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர். வெகுவிரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவை எட்டுவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் முக்கிய கலந்துரை யாடலொன்றை நடத்தினர். இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழி லாளர் காங்கிரஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக்

அம்பாறை மாவட்டபுதிய அரசாங்க அதிபருக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்து

Image
அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. துசித பீ வணிகசிங்க, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) சந்தித்தார். இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு அமைச்சர் ஹக்கீம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் உடனிருந்தனர்.

ரவுப் ஹக்கீம்,பசீர் சேகு தாவூத் ஆகியோரது பதவி இராஜினாமா வர்த்தமானிப் பத்திரிகையில்

Image
நீதி அமைச்சர் ரவுப் ஹக்கீம்  மற்றும்  வினைத்திறன் மேம்பாட்டு அமைச்சர்  பசீர் சேகு தாவூத் ஆகியோரது பதவி இராஜினாமா  உத்தியோக பூர்வமாக 1895/45 ஆம் இலக்க 2015.01.03 ஆம்  திகதிய விசேட வர்த்தமானிப் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டுள்ளது .

5 இலட்சம் வாசகர்களை தாண்டி எமது இணைய தளம் -வாசகர்களுக்கு பாராட்டுக்கள்

Image

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம்

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகத்தலைவரும்  முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் நினைவு தினத்தையொட்டி அபிவிருத்தி வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, திகாமடுல்ல மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச  அபிவிருத்திக் குழுத்தலைவருமான சட்டத்தரணி எச் எம். எம். ஹரீஸ்  அறிவித்துள்ளார். மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து  14ஆவது வருடத்தை  நினைவுகூரும் முகமாக எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதிவரை  அபிவிருத்தி வாரத்தை கல்முனை தொகுதியில் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.   இந்த வாரத்தில் தேவையுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார  முன்னெடுப்புக்களுக்கான உபகரணங்;கள் வழங்குதல்,  உட்கட்டமைப்பு  அவிவிருத்தி வேலைதிட்டங்;களை அங்குரார்ப்பணம்; செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஹரீஸ் மேலும் தெரிவித்தார்.

சம்மாந்துறையில் பெட்டைகோழி கூவுகிறது

Image
சேவல் கூவி  பொழுது விடியும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விடயம் . மாறாக முட்டையிட்டு அடைகாக்கும் பேட்டுக் கோழி கூவிக் கொண்டிருக்கும் அதிசயம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் இடம் பெறுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக  சம்மாந்துறை விளினயடி வீதியில் வசித்துவரும்  அட்டாளைச்சேனை மக்கள் வங்கி கிளையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிகின்ற  கபீர் என்பவரது வீட்டிலேயே இந்த அதிசய நிகழ்வு இடம் பெறுகிறது . தற்சமயம் அடைகாத்துக் கொண்டிருக்கும் இந்த பேட்டுக் கோழி  சேவல் கூவுவது போன்று சிறகடித்து கூவிக் கொண்டிருக்கிறது . 

மருதமுனை (சுவேடோ - சிறிலங்கா) சமூக அபிவிருத்தி நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த பரிசளிப்பு விழா

Image
மருதமுனை (சுவேடோ - சிறிலங்கா) சமூக அபிவிருத்தி நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்த பாரி சளிப்பு விழா மருதமுனை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.  பாராளுமன்ற உறுப்பினர் பீ. எச். பியசேன பிரதம அதிதியாகவும், தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், கல்முனை மாநகரசபை முன்னாள் முதல்வருமான காலநிதி சிராஸ் மீராசாஹிப் கௌரவ அதிதியாகவும், கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஏ. டபிள்யூ.ஏ. கபார் மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர் .  அதிதிகள் நினைவுப் பாரிசுகள் வழங்குவதையும், கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

'எடின்பார்க்” பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் எ.எல்.எம். றிஸான் சர்வதேச 'வெள்ளி' விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Image
சகவாழ்வு பிரதி அமைச்சரும்    இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான எ.எல்.எம். றிஸான் சர்வதேச  ' வெள்ளி '  விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய நாட்டின்  ' எடின்பார்க் ”  பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் எ.எல்.எம். றிஸான் சர்வதேச  ' வெள்ளி '  விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ்விருது வழங்கும் நிகழ்வு  14.09.2014 ம்    திகதி ஞாயிற்றுக் கிழமை பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டளஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவ்விருது வழங்கப்படவுள்ளது. இ ளை ஞர் ஆளுமை , தலைமைத்துவம் , சமூக அபிருத்தி செயற்பாடு களுக்காக இவ்விருது இவருக்கு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப கல்வியை கமு / அல் - ஹிலால் வித்தியாலயத்திலும்  உயர்தர கல்வியை கமு /  ஸாஹிறாக் கல்லூரியிலும்   தற்போது திறந்த பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞான பீட த்தில் கற்றுவருகின்றார். 2006 ம் ஆண்டு சாரணியத்தில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதைப் பெற்றுக் கொண்ட  இவர்  2008 ம் ஆண்டு 

கல்முனை வெஸ்லி கல்லூரி அதிபர் பிரபாவுக்கு பாராட்டு

Image
கல்முனை நியூஸ் இணையதளமும் வாழ்த்துகிறது   இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்ட கல்முனை உவெஸ்ஸி உயர்தரப்பாடசாலையின் அதிபர் வ.பிரபாகரன் அவர்களுக்கு வரவேற்பும் கௌரவிப்பும் இடம் பெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.கலையரசனின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு அதிபரையும் அவரது பாரியாரையும் வரவேற்றதோடு பாராட்டிக் கௌரவித்தனர். அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் போதகர் அல்லாத ஒருவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும். அதே வேளையில் இலங்கையின் 52ஆவதும், தமிழ் பேசும் இனத்தில் 17ஆவது உப தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரை கௌரவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சார்பில் எஸ்.எம்.எம். ரம்ஸான் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் . 

என்னதான் பேசி இருப்பார்கள் ???

Image
ஊவா மாகாண சபை தேர்தலில்  இரட்டை  இலை  சின்னத்தில்  போட்டியிடும் அரசியல் எதிரிகளான இரு தலைவர்களும்  பதுளையில் நடை பெற்ற கூட்டத்தில் ஒரே மேடையில் சந்தித்தனர் . இவர்கள் இருவரும் என்ன பேசி இருப்பார்கள் என இரு தரப்பு கட்சி ஆதரவாளர்களும் தலைகளை போட்டு உடைக்கின்றனர் . 

மாளிகைக்காடு கிராமத்துக்குள் காட்டு யானை ! மக்கள் கலவரம் சொத்துக்கும் சேதம்

Image
 SMR இன்று(28) அதிகாலை 2 மணியளவில் மாளிகைக்காடு மேற்கில் உள்ள ரியால் மர ஆலை வீதியில் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த மக்கள் கூக்குரலிட்டு யானையை விரட்டியுள்ளனர். இதன்போது அருகில் இருந்த மதில் சுவர் ஒன்றை வீழ்த்திவிட்டு மாளிகைக்காட்டின் தெற்குப்புறமாக உள்ள   காரைதீவுப் பக்கமாக அந்த யானை ஓடிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

'Muslims of Sri Lanka - Under Siege'

Image
"Latheef Farook" This  book is about the never ending 'Hate- Muslim' campaign unleashed by a small group of Sinhala racists  who fortunately do not enjoy the support of the vast majority of  Sinhalese in the country.  The writer is concerned that this campaign, unless brought to a  halt, is likely to lead to a total breakdown in communal  harmony to the detriment of the country which has  just  emerged from a devastating ethnic war.  This campaign began around four years ago, coincidentally or  otherwise, with the ever increasing Israeli presence in the  island. Today the Muslim community has become the victim of  not merely highly offensive hate speeches but also subjected  to attacks on mosques, religious schools, halal food,  women’s dress code,  slaughtered pigs thrown into mosque, burning and urinating  on Holy Quran, forcing Muslim students to kneel down and  worship Sinhalese teachers, writing Allah’s name on

கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை பந்தாட்டப் போட்டியில்

Image
கல்முனை பிர்லியன் விளையாட்டு கழகத்தின் வீரர் எஸ்.எல்.யஹியா அரபாத் 200 வது உதை    பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றுவதை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை பிர்லியன் கழகத்தின் ஏற்பாட்டில் நடை பெறவுள்ளது . இதனையொட்டி  எதிர்வரும் வெள்ளிக்கிழமை(29) பி.ப 4.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி  பொது மைதானத்தில் நிகழ்வுகள் நடை பெறவுள்ளது என கழகத்தின் பொது செயலாளர் எஸ்.ரீ .பஸ்வக்  தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கல்முனை பிர்லியண்ட் கழகத்துக்கும் காத்தான்குடி சண் றைஸ் கழகத்துக்குமிடையே  உதை  பந்தாட்டப் போட்டி இடம் பெறவுள்ளது . போட்டியில் எஹியா அரபாத் 200வது போட்டியை சந்திக்கின்றார் .  கழகத்தின் தலைவர் ஐ.எல்.சம்சுதீன் தலைமையில் நடை பெறவுள்ள நிகழ்வுககளில் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ்  கௌரவ அதிதியாகவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.ரக்கீப்> கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ.கப்பார்  ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் 

கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா

Image
( எஸ்.எம்.எம்.றம்ஸான் ) கல்முனையின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா எதிர் வரும் 2014.08.02 சனிக்கிழமை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் ஆராதனை  மண்டபத்தில் இடம் பெவுள்ளது. இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்,நிழல் கல்வி பிரதியமைச்சருமான ஏ.எம்.எம்.முஜிப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள்  அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பிரதம அதிதியாகவும் , பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளா , கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலில்  உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

பொருநாள் வாழ்த்து

Image
எமது ஊடக வளர்ச்சியில் எம்முடன் இணைந்து உழைத்த எமது ஊடக சொந்தங்களுக்கு இனிய பொருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். எமது ஊடகப் பணி வளர்ச்சியில் உங்களின் பங்களிப்புக்களை மென்மேலும் எதிர்பார்த்தவர்களாக ...... ஆசிரியர் எங்கள் தேசம் 77,Dematagoda Road,  Colombo-09 0778927350 0112 689 324 Email:  news@engalthesam.lk WEB:  www.engalthesam.lk

இணையத்தள பெருநாள் வாழ்த்து

Image
உங்கள் பெருநாள் வாழ்த்துக்கள்  எமது இணைய தளத்தில்  பிரசுரிக்க விரும்பினால்  தங்களின் வாழ்த்துக்களையும்  புகைப்படத்தையும்  எமது இணையதளதின்  முகவரிக்கு அனுப்பி வைக்கவும்( இரு தினங்களுக்கே வாழ்த்து சேவை இடம் பெறும் )