Posts

Showing posts with the label சமயம்

களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நெரிசல் 14 பேர் வைத்திய சாலையில் அனுமதி

Image
களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற  ஆலய ருத்திர வேள்வியில் கலந்து கொண்டு ருத்ர மாலை பெறுவதற்கு  ஏற்பட்ட  நெரிசலில் சிக்குண்டு காயமடைந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவர்களும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிலும்  ,மட்டக்களப்பு  வைத்தியசாலையிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் . களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நடத்தப்பட்டுவரும் ஏகாதச ருத்ர வேள்வியின் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று வியாழக்கிழமை  யாகம் நடைபெற்றது 

ஹஜ் கோட்டாவினை 5 ஆயிரமாக அதிகரிக்குமாறு சவூதி அரசிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

Image
இலங்கைக்கு வழங்கப்படுகின்ற 3 ஆயிரம் ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக மேலும் 2 ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை வழங்குமாறு சவூதி அரேபியா அரசிடம் முஸ்லிம் அலுவல்களுக்குப் பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.   சவூதி அரேபிய அரசின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கு பொறுப்பான அமைச்சர் டொக்டர் சாலிஹ் பின் முஹம்மத் தாஹிர் பன்தன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர். ரபத் இப்னு இஸ்மாஈல் இப்ராஹீம் பதர் ஆகியோரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாஸர் எச். அல் ஹரிதி ஊடாக குறித்த கடிதம் சவூதி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக இலங்கையில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வருடா வருடம் கிடைக்கப்பெறுவதாக சுட்டிக்காட்டி இவ்வருடம் 5ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஹிஸ

கல்முனையில் இடம்பெற்ற மீலாத் விழா

Image
முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கல்முனையில் பிரமாண்டமான மீலாத் விழா ஊர்வலமும் துஆ பிரார்த்தனையும்  இன்று இடம் பெற்றது. சுன்னதுவல் ஜமாத்தினரதும் ஈராக் ஒன்றியத்தினரதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மீலாத் விழா ஊர்வலம் இன்று காலை கடற்கரைப்பள்ளிவாசலில் இருந்து துஆ பிரார்த்தனையுடன் ஆரம்பித்து கல்முனை  வீதி வழியாக சென்று கல்முனை நகரை அடைந்தது .இந்த ஊர்வலத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளும் வாகன உரிமையாளர்களும் கலந்து கொண்டதோடு அரபுக்கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.இதன் போது கல்முனை நகர் உட்பட அனைத்து பிரதேசங்களிலும் அன்னதான நிகழ்வூகளும் இடம்பெற்றது.

முகமது நபி(ஸல்) பிறந்த மாதத்தை வரவேற்று கல்முனை முகைதீன் பள்ளியில் விழா

Image
முகம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ரபியுல் அவ்வல் மாதத்தை வரவேற்று கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மினாராவில் கொடியேற்றப்பட்டது . கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் இருந்து உலமாக்கள் மற்றும்  பொது மக்களினால்  கொடி  பைத் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது  கொடியேற்றப்படத்தை தொடர்ந்து மௌலிது மஜ்லிஸ் இடம்பெற்றது 

கேதார கெளரி விரத இறுதிநாள் வழிபாடும் காப்புக்கட்டும்

Image
கல்முனை ஸ்ரீ தரவை  சித்திவிநாயகர்     ஆலயத்தில்   சிவ ஸ்ரீ ஸ்ரீராமச் சந்திர குருக்கள் தலைமையில் கேதார கெளரி விரத இறுதிநாள் வழிபாடும்  காப்புக்கட்டும் நிகழ்வும்   நடை பெறுவதைக் காணலாம் 

கல்முனையில் நடை பெற்ற கிறிஸ்தவ மக்களின் கல்லறை திருவிழா

Image
(யு.எம்.இஸ்ஹாக் ) இறந்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற மரித்தோரை நினைவு  கூர்ந்து  கிறிஸ்தவ சபைகளால்  கொண்டாடப் படுகின்ற சிறப்பு விழா  இதனைக்கல்லறைத் திருநாள் எனவும் அழைப்பர். கத்தோலிக்க திருச்சபை உட்பட பல கிறித்தவ சபைகள் இவ்விழாவை நவம்பர் 02 ஆந் திகதி உணர்வு  பூர்வமாக கல்லறைகளுக்குச் சென்று கொண்டாடி வருகின்றன. கிழக்கு கிறித்தவ சபைகளின் கத்தோலிக்க திருச்சபை இந்நாளைச் சிறப்பாக நினைவு  கூர்கின்றது. மேலும்,ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் பழைய கத்தோலிக்க திருச்சபைகளும் இதனைக் கொண்டாடுகின்றன. இறந்தோரை நினைவு கூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் "தூய்மை பெறும் நிலை" பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும். தூய்மை பெறும் நிலையை கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி நூல் இவ்வாறு விவரிக்கிறது தூய்மை பெறும் நிலை என்பது கடவுளோடு நட்புறவில் இறந்து, நிலைவாழ்வு  உறுதி செய்யப்பட்டிருந்தாலும் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் நிலை ஆகும் இந்த தூய்மை பெ

கல்முனை சைவமகா சபையின் பொன் விழா

Image
ஆன்மீக அமைப்புக்களில் மிக தொன்மை வாய்ந்ததொரு அமைப்பாக அம்பாறை மாவட்டத்தில் இயங்கி வரும் கல்முனை சைவமகா சபையின் பொன் விழா மலர் வெளியீடும் 50ஆண்டு நிறைவு  விழாவும் கல்முனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தில் (28) ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சைவமகா சபைத் தலைவரும் ஓய்வு  நிலை இலங்கை வங்கி  உயரதிகாரியுமான  வித்தகர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தஜீ மகராஜ், பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சைவ மகா சபை  முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக் குருக்களினால் கல்முனை சைவ மகா சபை பொன் விழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. மலரின் முதல் பிரதியை ஆன்மீக அதிதியாக கலந்து கொண்ட  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தஜீ மகராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் நடன ஆசிரியை கலா வித்தகர் நுண்கலைமானி  திரு

பைந்தமிழ்க்குமரனின் அக்கினி யாத்திரை நாடகம் ஒரு பார்வை

Image
( யூ.எம்.இஸ்ஹாக்)   கல்முனை பாண்டிருப்பில் வாழ்ந்து கொண்டு கல்விப்பணியுடன் கலைப்பணியும் ஆற்றி வரும் பைந்தமிழ்க்குமரன் டேவிட் அதிபர்  அவர்கள் படைத்த அக்கினி யாத்திரை நாடகத்தை கடந்த 30.09.2018 ஞாயிறு திருஇருதயநாதர்  அரங்கிலே சுவைக்கக் கிடைத்தது. கிறீஸ்த்தவ விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட நாடுதழுவிய நாடகப்போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்த நாடகம் இது. அண்மையில் தலைநகர்  கொழும்பு டவர்  அரங்கில் அதற்கான பரிசளிப்பு நிகழ்வு  சுற்றலாத்தறை அபிவிருத்தி மற்றும் கிறீஸ்த்தவ மத அலுவல்கள் அமைச்சரின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேசிய ரீதியில் முதலாம் இடத்தை இந்த நாடகம் பெற்றதுடன் சிறந்த நாடகப்பிரதி, சிறந்த நெறியாள்கை, சிறந்த இசையமைப்பு, சிறந்த நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம் எனும் சிறப்பு  விருதுகளையூம் தட்டிக் nடிகாண்டது. அத்துடன் அருட்தந்தை ஏ.ஜேசுதாசன் அடிகளாருக்கு சிறந்த இணைப்பாளர் வழிகாட்டிக்கான  சிறப்பு விருதும் கிடைத்தது.      அக்கினி யாத்திரை நாடகத்தை எழுதி பயிற்றுவித்து நெறியாள்கை ஒப்பனை அரங்க முகாமைத்துவம் செய்து மேடையளிக்கை செய்தவர்  இலங்கையின் பெயர் பெற

கல்முனை செலான் வங்கி கிளையின் வாணி விழா

Image
கல்முனை  செலான்  வங்கி கிளையின் வாணி விழா வங்கி முகாமையாளர் பிறேமினி மோகன்ராஜ் தலைமையில்    இன்று  நடை பெற்றது.  பிராந்திய முகாமையாளர் எஸ்.எஸ்.முததீச பிரதம அதிதியாக கலந்துகொண்டிருப்பதையும் விக்கினேஸ்வரன் பிரம்மின் பூசை வழிபாட்டினை நடத்துவதையும்  வாடிக்கையாளர்கள் வங்கி ஊழியர்களையும் காணலாம்