கடமைகளை பொறுப்பேற்றார் மஹிந்த - பிரதமர் செயலாளராக காமனி செனரத் நியமனம்
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, புதிய பிரதமரின் செயலாளராக ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment