கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான தேர் திரு விழா இன்று
கல்முனை நகர் அருள் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த தேர் திரு விழா இன்று வியாழக்கிழமை (21) பக்த அடியவர்கள் புடைசூழ விமர்சையாக இடம் பெற்றது. . சிவனடியார்களால் வியந்து பாடப்பெற்றதும் சித்தர்களால் சிவா பூமி என போற்றப்பட்டதும் ரிஷிகளின் பாதம் பட்ட புண்ணிய பூமியாம் கிழக்கின் கல்முனை மாநகரில் அடியவர்கள் இன்னல்கள் களைந்து அருள் மழை பொழிய கோயில் கொண்டு எழுந்தருளி நவரத்தின கசிந்த சொர்ண சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரப்பெருமான் தேர் திருவிழா இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு விநாயகர் வெளிப்பாட்டோடு ஆரம்பமாகி காலை 6.00 மணிக்கு சந்தான ஈஸ்வரப்பெருமான் தேரில் ஆரோக்கரித்து வீதி உலா இடம் பெற்றது. கடந்த திங்கட் கிழமை (11) கொடியேற்றத்துடன் ஆரம்பமான கிரியைகளை தொடர்ந்து மூன்று நாட்கள் திரு விழாக்கள் நடை பெற்று ஐந்தாம் நாள் சடங்கான மாம்பழத்திருவிழா திரு விளக்கு பூஜை பக்தி முக்தி திரு விழாக்கள் நடை பெற்று திங்கட் கிழமை (18)...