மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்தவர் யார்?
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஒருவர் குதித்துள்ளது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (17) முற்பகல் 9.30 மணி அளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் கல்லடி பாலத்தில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வந்ததாக தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும் அவரது பாதணியும் பாலத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாலத்தில் இருந்து பாய்ந்ததாக தெரிவிக்கப்படும் நபரை தேடும் பணிகளில் கடற்படையினரும் மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Comments
Post a Comment