Posts

Showing posts from September, 2018

கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Image
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் கல ்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் 3400 கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று(19-09-2018)மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது இதற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :-பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியுடனும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்களின் பங்களிப்புடனும் இந்த வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபை பிரதேச மக்களுக்காக கொண்டவரப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் 3400 கோடி ரூபா நிதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.கல்முனை ம...

பிரதி அமைச்சர் ஹரீஸ் சபாநாயகரிடம் மகஜர் கையளிப்பு.

Image
(அகமட் எஸ். முகைடீன்) இந்நாட்டின் தேசிய நலனுக்காக பெரும் பங்காற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க கோரும் மகஜர் ஒன்றை பிரதி அமைச்சர் ஹரீஸ் இன்று (20) வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று முந்தினம் (18) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் மேற்படி கோரிக்கைக்கான வேண்டுகோளை தனது உரையின்போது விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சர் பாராளுமன்றத்தில் விடுத்த அவ்வேண்டுகோளை செயலுருப்படுத்தும்வகையில் சபாநாயகர் கரு ஜயசூரியவை பாரளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து மேற்குறித்த மகஜரை கையளித்துள்ளார். இலங்கை அரசியலில் ஒரு கிங் மேக்கராக இருந்த அஷ்ரஃப் அவர்களின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றமை இங்கு குற...

கல்முனை நகருக்குள் காட்டு யானைகள்

Image
கல்முனை நகருக்குள் காட்டு யானைகள் புகுந்து மக்களுக்கு அச்சுறுத்தல் கட்டுப்படுத்துமாறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர் . நேற்று இரவு (12) கல்முனையில் உள்ள விதைநெல் உற்பத்தி நிலையமொன்றை உடைத்து அங்கிருந்த விதை நெல்லை சேதப்படுத்திய சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

Image
நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் சமூக சேவை பிரிவினால் நற்பிட்டிமுனையில் வலது குறைந்த ஒருவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு செய்யப்பட்டது.    நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் தலைவர் சி.எம்.ஹலீம்  நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேஷன் ஆலோசகரும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு அதிபருமான திருமதி ஏ.முனாஸிர் ஆகியோர் சக்கர நாற்காலி வழங்கி வைப்பதைக் காணலாம் 

நற்பிட்டிமுனையில் டெங்கு சுகாதார திணைக்களம் உறக்கத்தில்

Image
நற்பிட்டிமுனை கிராமத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது இதற்கு சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லையென அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . நற்பிட்டிமுனை கிராமத்தில் பாவா வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் சிறுவர்கள் என பலர் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையிலும் அகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட ்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் டெங்கு நுளம்பினால்தான் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வைத்தியசாலை வட்டாரமும் நற்பிட்டிமுனை பொது மக்களும் சுகாதார வைத்திய அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ள போதிலும் இதனை கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இந்த செய்தி எழுதும் வரைக்கும் எடுக்கப்படவில்லை . இப்போதே கட்டுப்பாடுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லயெனில் கிராமம் முழுவதும் பரவலாம் என்ற அச்சம் நற்பிட்டிமுனை கிராம மக்கள் மத்தியில் நிலவுகின்றது. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லயென நற்பிட்டிமுனை பொது மகன் ஒருவர் கல்முனை பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளரு...