Posts

Showing posts from June, 2017

பல்கலைக்கழக மாணவர்கள் அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு

Image
2016-2017 கல்வியாண்டுக்கென பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாளை முடிவடைய இருந்த கால எல்லை எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டள்ளதாக பல்ககைலழகங்கள் மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்தார். இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் மானிய ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடி கடற்கரை வீதி திறந்து வைப்பு

Image
(ஆர்.ஹஸன்) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு இணங்க உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காபட் இடப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதி (மெரைன் டிரைவ்)  நேற்று புதன்கிழமை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் ஜே.பி. தலைமையில் நடைபெற்ற வீதி திறப்பு விழாவில், இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.  காத்தான்குடி கடற்கரை வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனது நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 60 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்கமைய 2.8 கிலோ மீற்றர் தூரம் காபட் இடப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள சிறயளவு தூரத்தையும் காபட் இடுவதற்கான நடவடிக...

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

Image
தரம் 1இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம் என்று கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்களை தபாலில் சேர்ப்பதற்குரிய காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றது. தபால் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதில் சில பெற்றோர் சிக்கல்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பெற்றோர் தாம் விண்ணப்பிக்கும் பாடசாலையின் அதிபரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுபற்றி சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கையேற்கும் அதிபர்கள் அதனை ஏற்றுக் கொண்டதற்கான எழுத்துமூல ஆதாரத்தை சமர்ப்பிப்பார்கள் என்றும் கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார்.

விருப்பமின்றி எம்மை விட்டும் விடைபெறும் ரமழான்

Image
இரக்கமுள்ள இறைவன் எமக்கு அனுப்பிவைத்த அருட்கொடையை சுமந்து வந்து  வழங்கி விட்டு விருப்பமின்றி எம்மை விட்டும் விடைபெறும் இப்புனித ரமழானின் அருள் நிறைந்த இம்மாதத்தின் நிறைவில் கண்ணெட்டும் தூரத்து வான்தொட்ட நூல்இளை ஒளிக் கீறலாய் ஷவ்வால் ஏந்தி வந்து இளம் பிறை தந்த  நோன்புப் பெருநாளான இன் நன்னாளை வைகறைவிடியலில் விழித்தெழுந்து கடற்கரை  நீள் மணல்பரப்பிலும் மஜ்லிஸ்களிலும் ஒன்றிணைந்த அல்லாஹூ அக்பர் எனும் தக்பீரின் ஓசையுடன் தொழுகையோடு தொடர்ந்து ஈத் முபாறக் எனும் வாழ்த்தொலிகளுடன் பரஸ்பரம் அன்போடு பரிமாறி கொண்டாடித் திளைத்திருக்கும் அகிலத்தின் இசுலாமிய உறவுகள் மற்றும்  என் முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்  ஈகைத்திரு நாளின் எனதினிய நல் வாழ்த்துகள் மருதூர் மெளஜுன் Zim,mazhoth

முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் அவர்களின் பெருநாள் வாழ்த்து

Image

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரின் பெருநாள் வாழ்த்து

Image

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Image
யூ.கே.காலித்தீன்  வாதம் மேலோங்கியிருக்கின்ற சூழலில் நமக்காக துணிந்து குரல் கொடுக்கின்ற அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; எந்த இனவாத பூதத்தின் நெருக்குவாரங்களுக்காக முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி, அதற்காக அணிதிரண்டு ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்களோ, அதே இனவாத பூதம் இந்த நல்லாட்சியிலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டு, அடக்கியொடுக்க எத்தனித்திருப்பதானது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இனவாத சக்திகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் அடிபணிந்திருப்பதானது இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இதனால் நாம் இன்று அரபு நாடுகளினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக முன்னிற்கின்ற சமூகத்திற...

பெருநாள் வாழ்த்துக்கள்

Image

eid mubarak

Image

பெருநாள் வாழ்த்துக்கள்

Image

பெருநாள் வாழ்த்துக்கள்

Image

கிழக்கு முதலமைச்சரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

Image
முப்பது நாட்கள் பசித்திருந்து  நோன்பு நோற்று புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கின்றேன். இந்த நோன்புப்  பெருநாள்​ முஸ்லிங்களிடையே ஐக்கியத்தையும் அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்தும் இனிய பெருநாள் தினமாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கொள்கின்றேன். கடந்த  ரமழானைப் போன்று இந்த ரமழானிலும் முஸ்லிங்களை அச்சமூட்டும் செயற்பாடுகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது,’ முஸ்லிங்களின் மதஸ்தலங்களின் மீதான தாக்குதல்கள்,வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தைய அச்சமூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவே இதை ஒரு போதும்  ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் அடுத்த நோன்பு காலத்திலாவது  முஸ்லிங்கள் நிம்மதியாக அச்சமின்றியும் தமது மார்க்கக் கடமைகளை முன்னெடுக்ககூடிய சூழ்நிலையை அரசாங்கம் தற்போதே ஏற்படுத்த முன்வரவேண்டும், கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முஸ்லிங்களுக்கு ...

இன நல்லிணக்க முயற்சிகளுக்கு உறுதிபூணுவோம்!

Image
பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்  புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் ஈத்முபாறக்! நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்பட இத்திருநாளில் விசேட துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடடுவதுடன், அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்த ஒவ்வொரு முஸ்லிமும் உறுதிபூண வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-  புனித அல்குர்ஆன் உபதேசித்துள்ளது போன்று முஸ்லிம்கள் எவ்வாறான சூழ் நிலையிலும் பொருமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சக்திகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற இக்காலப்பகுதியில் நாங்கள் மிகவும் கவனமாகவும், சமயோசிதமாகவும் செயற்பட வேண்டியுள்ளது.  சமகாலத்தில் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கு...

கல்முனை வெஸ்லியன் நடை பவனி

Image
கல்முனை வெஸ்லி கல்லூரியின் 135வது ஆண்டை வரவேற்கும் வகையில் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த வெஸ்லியன் நடை பவனி இன்று காலை கல்முனையில் நடை பெற்றது. கல்முனை ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் முன்பாகவும் ,பாண்டிருப்பு தாள்வெட்டுவான் சந்தியிலிருந்தும் ஆரம்பமான நடை பவனி கல்லூரி மைதானத்தை வந்தடைந்து நிறைவடைந்தது . கல்லூரி முதல்வர் வீ.பிரபாகரன் தலைமையில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் நி கழ்வை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார் நிகழ்வில் பழைய மாணவர்கள் பலர் உணர்ச்சி பூர்வமாக கலந்து கொண்டனர்

கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இப்தார் அம்பாறை மாவட்டதில் நடை பெற்றது

Image
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இப்தார் அம்பாறை மாவட்டதில்  நடை பெற்றது   கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள இவ்வருட இப்தார் சிறப்பு நிகழ்ச்சி அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை கல்வி வலயத்தில் இன்று நடை பெற்றது. கிழக்கு மாகாண கல்விப்  பணிப்பாளர் எம்.ரீ .ஏ.நிஸாம் தலைமையில் சாய்ந்தமருது  லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடை பெற்றது . கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட கிழக்கு மாகாண கல்வித் பணிப்பாளர்கள் ,பிரதிக்கல்விப்  பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கோட்டக் கல்விப்  பணிப்பாளர்கள் , அதிபர்கள்,திணைக்களத்  தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள்  ,அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என அறு நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்