பத்திரிகையாளர் மருதமுனை காதருக்கு பாராட்டு விழாவும்,தீரா-மை மலர் வெளியீடும்



மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் 28வருட ஊடக சேவையை கௌரவிக்கும் வகையில் மருதமுனை புதுப்புனைவு  இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த பாராட்டு விழா சனிக்கிழமை (28-05-2016)மருதமுனை பொது நூலகக் கட்டடத்தில் அமைந்துள்ள சமூக வள நிலையத்தில் நடைபெற்றது 

ஓய்வு  பெற்ற நிர்வாக உத்தியோகத்தர் கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் விடி வெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டார் இங்கு பள்ளிவாசல்களின் தலைவர்கள்,சட்டத்தரணிகள், பாடசாலை அதிபர்கள், ஊர் பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் பற்றிய “தீரா-மை”என்ற பெயரில் நினைவு  மலர் ஒன்றும் வெள்ளிடப்பட்டதுடன், பல அமைப்புக்களால் இருபதுக்கும் மேற்பட்ட பொன்னாடைகள் போர்த்தி ஐந்து நினைவுச் சின்னங்களும் பல நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுன் அவரது மனைவிக்கும் விஷேட பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
கவிஞர் ஏ.எம்.குர்சித் நன்றியுரை வழங்கியதுடன்  ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் .






















ஊடகத்துறையின் மூலம் சமூகத்திற்கு பெரும் சேவையாற்றிவருபவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்
பேராசிரியர் றமீஸ்அப்துல்லா நல்ல செய்திகளையோ செய்திகளுக்குப் பின்னால் இருக்கின்ற கதைகளையோ எழுதுகின்ற பத்திரிகையாளர்களை காண்பது மிக அரிது ஆனால் காதர் தன்னுடைய தகுதிக்கு அப்பால் சென்று மிகப்பாரிய பணிகளையாற்றிய மிகமுக்கியமான பத்திரிகையாளர் என்பது  எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது அந்த வகையில் அவரைப் பாராட்டுகிறேன் என தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தெரிவித்தார். 

இங்கு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா மேலும் உரைற்றுகையில் ஊடகவியலாளர் காதர் பல்வேறுபட்ட கூலித்தொழிகளைச் செய்து வந்தவர் அவர் இன்று நாடு போற்றும் பத்திரிகையாளனாக நாடுபோற்றுகின்ற பத்திரிகை விருதுகளை வென்ற பத்திரிகையாளனாக மாறியிருக்கின்றார் இவரது பணி அளப்பரியது.

இந்த பத்திரிகைத் தொழில் மிகமுக்கியமானதொரு  தொழில் பத்திரிகைகள்தான் எங்களை ஒன்று சேர்க்கின்ற காரியத்தினை எங்களை சிந்திகக்வைக்கின்ற காரியத்தினை உணர்வு  பூர்வமாக இயங்குகின்ற காரியங்களை செய்ய வைக்கின்றன இந்தப் பத்திரிகைகளுடைய வரலாற்றை நாங்கள் சற்று திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஐனநாயகத்தினுடைய கருவிகளைப்பற்றிப் பேசுகிறவர்கள் ஜனநாயகம் இயங்குகிற முறைமைகளைப் பற்றிப் போசுகிறவர்கள் அது இயங்குகின்ற முறைமைகளைப் பற்றிப் பேசுகின்றவர்கள் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாகிய சட்டம்,நீதி,நிருவாகத்துறை,அதற்கு அப்பால் நான்காவது துறையாக இயங்குகிற ஊடகத் துறையை பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள். 

மகாத்மா காந்தி பத்திரிகையின் முக்கியமான குறிக்கோள் பத்திரிகைத்துறை சக்தி வாய்ந்ததாக அமைந்ததும்   கட்டுப்படுத்தப்டாத வெள்ளமானது  பயிர்களையும், ஊர்களையும், எவ்வாறு நாசம் செய்கின்றதோ அதேபோன்று கட்டுப்படுத்தப்டாத பேனாக்கள்  நாட்டையே அழித்து விடும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். 

அந்தவகையில் காதர் செய்திகளையும்,புகைப்படங்களையும், செய்தியாக்காமல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.அந்தக்கட்டுரைகள் கிழக்குப் பிரதேச மக்களின் துன்பங்களையும்,கஷ்டங்களையும் வெளிக்கொண்டுவரும் வகையில் அமைந்திருந்தது என்பது மிகமுக்கியமாகப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அந்த வகையிலே இந்த பாராட்டுக்குத் தகுதியானவர் என்பதோடு இந்த புதுப்புனைவு  இலக்கிய வட்டத்தையும் பாராட்டுகின்றேன் என்றார். 

விடி வெள்ளியை அறிமுகப்படுத்துவதிலும் அதற்கு செய்திகளை எழுதுவதிலும் அதிக அக்கறை காட்டி வருபவர் பி.எம்.எம்.ஏ.காதர்

விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ்     விடி வெள்ளி பத்திரிகை ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை அவர் தொடராக செய்திகளை எழுதி வருகின்றவர் அத்தோடு விடிவெள்ளி பத்திரிகையை அறிமுகப்படுத்துவதிலும் அதிக செய்திகளையும் கட்டுரைகளை எழுதுவதிலும்  மிகவும் அக்கறை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதேச மக்களின் பிரச்சினைகளை கட்டுரை வடிவிலே எழுதுவதில் இப்பிரதேசத்திலே இருக்கின்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து  வருகின்றார் என்றுதான் சொல்வேன் அதனால் தான் அவருக்கு  சுப்ராமணியம் செட்டியார் விருது,சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருதுகளை  இரண்டு முறை பெறமுடிந்தது. 

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் நடத்தப்படுகின்ற விருது வழங்கும் நிகழ்விலே விருதைப் பெறுவது என்பது  சாதாரணமான விடையமல்ல சிரேஷ்ட ஊடகவியலாளர்களைக் கொண்டு பல்வேறு தரப்படுத்தலின் கீழ்தான் தகுதியானவர்கள் தெரிவு  செய்யப்படுகின்றார்கள் அந்த விருதுகளை வழமையாக தேசிய ஊடகங்களிலே அலுவலகத்தில் செய்தியாளர்களாக பணிபுரிகின்றவர்கள்தான் தட்டிக் கொள்வது வழக்கம் காதர் அவர்களோடு போட்டியிட்டு அந்த விருதை வென்றார் அந்த வகையில் பத்திரிகை சார்ந்த எங்களுக்கும் காதர் அவர்களுக்கும் இந்தப் பிரந்தியத்திற்கும் இப்பிராந்திய செய்தியாளர்களுக்கும் பெருமை.

அந்த வகையில் இரண்டு முக்கியமான பிரச்சினைகளை அடிக்கடி சுட்டிக்காட்டுவார் இந்தப் பிரதேசத்திலே சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் இடைத்தங்கள் முகாம்களில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளை மக்கள் வாழ்கின்ற இடங்ககளைத் தேடிச்சென்று அவர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவார்.

அவ்வாறான ஒரு பிரச்சினை தான் அக்கரைப்பற்று பிரதேச எல்லைக்குள் கட்டப்பட்ட நுரைச் சோலை 500 வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டு  பாழடைந்து கிடக்கிறது ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த வீடுகள் சென்றடைய வில்லை அந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் கட்டுரையை எழுதியிருந்தார் இரண்டு பக்கங்களிலே அந்தக்கட்டரையை பிரசுரித்த ஞாபகம் இருக்கின்றது.

அந்தக் கட்டுரையைப் பார்த்து விட்டு சவூதி அரேபியாவுடன் தொடர்புடைய ஒருவர் என்னோடு தொடர்பு கொண்டு அந்த கட்டுரைப் பக்கங்களைத் தருமாறும்.அதை அறபு மொழியிலே மொழிபெயர்த்து தூதரகம் ஊடாக நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னார் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் அந்த பேப்பர் கட்டிங்கை அவரிடம் நேரடியாக ஒப்படைத்தேன் இவ்வாறு சமூக விவகாரங்களிலே அவர் மிகவும் அக்கறையுடன் அறிக்கையிடுகின்ற பணியை கடந்த 28 வருடங்களாகச் செய்து வருகின்றார்.

அந்த வகையிலே மருதமுனை புதுப்புனைவு  இலக்கிய வட்டம் அவரைப் பாராட்டி கௌரவிப்பதையிட்டு நான் மிகவு  ம் மகிழ்ச்சியடைகின்றேன்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்