கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் வளைய மட்ட விளையாட்டுப் போட்டி


கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையிலான சுவட்டு மைதான விளையாட்டுப் போட்டி இன்று ( 31 ) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.
கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கணக்காளர் , கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர்கள் , உதவி கல்விப் பணிப்பாளர்கள் , கோட்ட கல்விப் பணிப்பாளர்கள் , பாடசாலை அதிபர்கள் , உடற்கல்வித்துறை உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் , உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை வலயத்திற்குட்பட்ட நிந்தவுர் , காரைதீவு , சாய்ந்தமருது , கல்முனை முஸ்லிம் கோட்டம் , கல்முனை தமிழ்க் கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த 800 இற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இப் போட்டி நிகழ்வுகளில் பங்கேற்றனர் 


வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கமருதீன் ரிஸ்வி யஹ்சர்  போட்டிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் .








Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்