கல்முனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தின நிகழ்வு
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச திவிநெகும சமுக அபிவிருத்தி பிரிவினால் நடாத்தப்பட்ட புகைத்தல்,போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு விழிப்பூட்டல் ஊர்வல நிகழ்வும், சென்ற வருடம் புகைத்தல்,போதைப்பொருள் பாவனை எதிர்ப்பு வேலைத்திட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் இருந்து ஆரம்பமான இவ் விழிப்பூட்டல் ஊர்வலம் பிரதான வீதியின் ஊடாக கல்முனை பஸ் நிலையம் வரை சென்று பொலிஸ் நிலைய வீதி ஊடக கல்முனை பிரதேச செயலகத்தை வந்தடைந்தது. திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ.ஆர் .எம். சாலிஹ், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி, திட்ட முகாமையாளர் எ.எம்.எஸ்.நயீமா, முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.எஸ். பரீரா, திவிநெகும வங்கி-வலய முகமைய...