கல்முனை குடி பள்ளிவாசல் மதிலைக் கட்ட நீதி மன்றம் தடை ! இதற்கு கல்முனை மாநகர முதல்வர் உடந்தையா?
கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்கு எதிராக மு.கா. உயா;பீட உறுப்பினரும்> கல்முனை மாநகர முதல்வாரின் இணைப்பாளருமான எம்.எஸ்.எம். சத்தார் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் செய்த வழக்குத் தாக்கலை அடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு விதித்துள்ளது.
இது விடயமாக தரியவருவதாவது
கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்து எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று இப்பள்ளிவாசலினை வைபவ ரீதியாக திறப்பதற்கான நடவடிக்கையினை பள்ளிவாசல் தலைவரும் வைத்தியருமான எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையிலான நம்பிக்கையாளா; சபையினா; மிகவும் சிரமத்துடன் துரிதமாக செயற்பட்டு வருகின்றனா;.
இதன் அபிவிருத்திப் பணிகளின் ஒன்றான பள்ளிவாசல் சுற்றுமதில் மிக அழகான தோற்றத்தில் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இச்சுற்றுமதில் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கோரி மு.கா. உயா;பீட உறுப்பினரும்> கல்முனை மாநகர முதல்வரின் இணைப்பாளருமான எம்.எஸ்.எம். சத்தார் மற்றும் எம்.ஏ. தஸ்லீம் ஆகியோர் இணைந்து கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனா;. இதனை அடுத்து கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பீ.ஏ.முகைதீன் 14 நாட்களுக்கு நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவினை வழங்கியுள்ளார் இவ்வழக்கின் சார்பாக சட்டத்தரணி யூ+.எம்.நிசார் ஆஜராகியிருந்தார் .
இவ்விடயம் சம்பந்தமாக மேலும் தொpயவருவதாவது>
கடந்த 13ம் திகதி கல்முனை மாநகர முதல்வா; சட்டத்தரணி நிசாம் காரியப்பா; ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சென்று தலைவா; டாக்டா; எஸ்.எம்.ஏ.அஸீஸினை சந்தித்துள்ளார் இச்சந்திப்பின் போது முதல்வர் இப் பள்ளிவாசல்; சுற்றுமதில் நிர்மாணப் பணிகள் மாநகர சபை அனுமதி பெறாமல் இடம்பெறுகின்றது. இது முற்றிலும் தவறான விடயம் என தலைவரிடம் தெரிவித்திருக்கின்றார் பள்ளிவாசல் அல்லாஹ்வின் வீடாகும். இதற்கான நிர்மாணப் பணிகளை ஜம்மியதுல் உலமாவின் அனுமதியினை பெற்று இப்பணியினை செய்து வருகின்றோம். தங்களிடம் அனுமதி பெறவில்லை என்பதற்காக இப்பணிகளுக்கு எதிராக தாங்கள் செயற்படவேண்டாம் என இதன்போது தெரி வித்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறான நிலையிலேயே இத்தடை உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்நீதிமன்ற தடை உத்தரவினால் கல்முனை குடி மக்கள் ஆத்திரமான நிலையில் காணப்படுகின்றனர்
கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசலின் சுற்றுமதில் மிக அழகான முறையில் இஸ்லாமிய மரபினை பறைசாற்றக் கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இச்சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அழகினை கண்டு இப்பிராந்திய மக்கள் மட்டுமல்லாது அனைவரும் மெச்சுகின்ற இவ்வேளையில் முதல்வரின் இணைப்பாளர் உள்ளிட்ட அவரின்ன் ஆதரவாளா;கள் இணைந்து இதன் நிர்மாணப்பணிக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று இவ்வேலைத்திட்டத்தினை நிறுத்தியுள்ளதானது கல்முனை குடி மக்களை விசனத்துக்குள்ளாக்கியுள்ளது.
நுற்றாண்டு காலமாக இருந்து வரும் பள்ளிவாசல் சுற்று மதில் எல்லைகள், பள்ளிவாசல் நிறுவகத்தில் உள்ளோரின் தனிப்பட்ட நோக்கதுக்காக, அகலம்12', நீளம் 80' கொண்ட காணி வாகனதரிப்பிடமாக கட்டுவதனை எதிர்த்தே இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான அரசியல் தடை ஈடும் இல்லை. பள்ளிவாசலின் ஜமாத்தினர் வாகன தரிப்பிடம் அமைவது பள்ளிவாசலுக்கு சிறந்தது அல்ல என பலமுறை அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாதான் காரணமாகதான் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
ReplyDelete