தெற்காசிய நாடுகளுக்கிடையில்நடை பெற்ற கராத்தே போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட சேனைக்குடியிருப்பு பாலுராஜ் காட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தினைவென்றெடுத்து இலங்கை தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்
அண்மையில் தெற்காசிய நாடுகளுக்கிடையில் இந்தியாவின் புது டில்லி நகரில் நடை பெற்ற கராத்தே போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சேனைக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த தமிழ் வாலிபரான சௌந்தராஜன் பாலுராஜ் காட்டா பிரிவில் தங்கப் பதக்கத்தினையும் குமிட்டே பிரிவில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றெடுத்து இலங்கை தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது . சேனை குடியிருப்பு கிராம மக்கள் ஒன்று கூடி ஏற்பாடு செய்த இந்த பாராட்டு விழாவில் தெற்காசிய சம்பியன் எஸ்.பாலுராஜ் திறந்த வாகனத்தில் நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு,கல் முனை காரைதீவு கிராமங்களுக்கு மாலை சூடி ஊர்வலமாக பவனி சென்றதுடன் தமிழ் முஸ்லிம் மக்களால் பாராட்டி கௌரவிக்கப் பட்டார்.
காலையில் 9.00 மணிக்கு சேனைக்குடியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் குறித்த இடங்களை சென்றடைந்து கல்முனை பிரதேச செயலகத்தில் பாராட்டு வாழ்த்துக்கள் இடம் பெற்றன . ஒய்வு பெற்ற அதிபரும் ,கராட்டே சம்மேளனத்தின் அம்பாறை மாவட்ட தலைவருமான் எஸ்.சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.ராஜகுலேந்திரன்,சேனைகுடியிரு ப்பு வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன் , கல்முனை பொலிஸ் நிலைய பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி ஏ.எம்.வாஹிட் உட்பட சாதனை வீரனின் தாயார் திருமதி அன்னம்மா சௌந்தராஜன் உட்பட அதிகாரிகள் பலரும் பொதுமக்களும் கலந்து பாராட்டியதோடு பண முடிச்சும் வழங்கி கௌரவித்தனர் .
எமது தாய்நாட்டுக்கு பெருமையை பெற்று கொடுப்பதற்கு எனக்கு வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இருந்த தனது சகோதரன் சென்சி எஸ். முருகேந்திரன் பொறியியலாளருக்கும் ,இந்த துறையில் என்னை ஐயம் தெளிந்து வழி நடாத்திய அமரர் சிகான் கே.இராமச்சந்திரன் அத்துடன் எனது அனைத்து விடயத்திலும் பங்காளியாக இருந்த எனது தாயார் அன்னம்மா சௌந்தராஜனுக்கும் பாலு ராஜ் நன்றியை தெரிவித்ததோடு , எனது வழிகாட்டியான அமரர் சிகான் கே.இராமச்சந்திரன் உயிருடன் இருந்திருந்தால் என்னை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றிருப்பார் . தங்கப் பதக்கத்தை பெற்று நாடு திரும்பிய வேளை இலங்கை விமான நிலையத்தில் என்னுடன் நாடு திரும்பிய சகோதர மொழி பேசும் போட்டியாளர்கள் அவர்களது பயிற்சியாளர்களாலும் ,உறவினர் களாலும் கௌரவித்து அழைத்து வரப்பட்ட போதிலும் தங்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த நான் தன்னந் தனியாக விமான நிலையத்தில் இருந்தேன் . அந்த விடயம் எனக்கு பெரும் கவலையை தந்தது என்று மிக கவலயுடன் பாலு ராஜ் தெரிவித்தார் .
The above Program Area Engineer-Water Board also participated but you did not informed.
ReplyDelete