சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி
- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது பிரதான வீதி நாவட்குடாவில் வைத்து மாடுகள் வீதியைக் குறுக்கறுத்ததன் காரணமாக விபத்துக்குள்ளானார்.
காத்தான்குடி வைத்தியசாலையில் அவசர சிகிட்சை பெற்ற அவர் மேலதிக சிகிட்சைக்காக தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது தோள்பட்டையில் இரண்டு இடங்களில் எலும்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கும் அதேவேளை முகம் உள்ளிட்ட உடம்பின் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் முன்பகுதி பற்களும் உடைந்து சேதமடைந்துள்ளது.
சகோதரர் நூர்தீன் விபத்துக்குள்ளான செய்து கேட்டு ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்ததை காணமுடிந்தது
அவர் பூரணமாக சுகமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் எமது இணையச் சமூகம் பிரார்த்திக்கின்றது.
Comments
Post a Comment