கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹுபருக்கு கௌரவிப்பு
நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தின் அதிபராகவிருந்து கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.ஜஹுபருக்கு லாபீர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில் புதன் கிழமை (27) பாடசாலையில் கௌரவிப்பு விழா நடை பெற்றது .அதிபர் உட்பட ஆசிரியர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி ,வாழ்த்து மடல் ,நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தனர் .
Comments
Post a Comment