பசில் ராஜபக்ஷவுடன் பா.பி.கியூ இறைச்சி சாப்பிட்டு மகிழ்ந்த சம்பந்தர் ஐயா !
இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் இலங்கைசென்றுள்ளார். வட கிழக்கு பகுதிகளுக்கு விஜயத்தை மேற்கொண்ட அவர் தமிழர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் என்றும், அவர் நல்லது செய்வார் என்றும் செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளது. ஆனால் இத் தூதுக்குழுவோ ஒரு தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது போல தமது பயணத்தைக் கழித்துவருகிறார்கள். கடற்கரைகளுக்குச் செல்வதும், இலங்கையில் பிரசித்திபெற்ற இடங்களைச் சென்று பார்வையிடுவதுமாகவே உள்ளனர்.
இவர்கள் தான் இப்படி அலைகிறார்கள் என்றால், இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ்க்கு விருந்து வங்கியுள்ளார் பசில் ராஜபக்ஷ. இதில் கலந்துகொண்ட சம்பந்தன் ஐயா பா.பி.கியூ(BBQ) இறைச்சிப் பொரியல்களை சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். அன்றைய தினம் சுஷ்மா அவர்களுக்கு என்னவோ சைவச்சாப்பாடுதன் பரிமாறப்பட்டதாம். ஆனால் மீதம் உள்ள அனைவருக்கும் இறைச்சிப் பொரியலும் பா.பி.கியூ என்று அழைக்கப்படும், சுட்ட இறைச்சி வகைகளும் வழங்கப்பட்டுள்ளது. வறுமை காரணமாக வன்னியில் ஒரு தமிழ் குடும்பம் சமீபத்தில் தற்கொலைசெய்துகொண்டது. இதுமட்டுமா சமீபத்தில் முன்னாள் போராளி மாணவி ஒருவர் கூட வறுமை காரணமாக தற்கொலைசெய்துகொண்டார் ! வன்னியில் பல ஈழத் தமிழர்கள் வறுமையில் அடுத்தவேளை சோறுக்கு அல்லாடும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரச விருந்துபசாரங்களில் கலந்துகொண்டு சொகுசாக தரமான உணவுகளை உண்டு மகிழ்ந்துவருகின்றனர். இது எந்த வகையில் நியாயம் ? பாதிக்கப்பட்ட மக்களிடன் இனி எவ்வாறு சென்று வாக்குகளை இவர் பெறப்போகிறார் ? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் ! |
Comments
Post a Comment