சொத்து விபரம் வெளியிடாத உறுப்பினருக்கு நடவடிக்கை
சொத்து விபரங்களை வெளியிடாத உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள தாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி யீட்டிய உறுப்பினர்களுக்கு தமது சொத்து விபரங்களை கையளிக்க கடந்த 25 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டது.
குறித்த காலப்பகுதியினுள் தகவல் வழங்காத கொழும்பு மாநகர சபை ஐ.தே.க. உறுப்பினர் துஷந்த மாலகொட மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment