நடிகை மனோரமா நலமுடன் இருக்கிறார்.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நடிகை மனோரமா சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருக்கிறார்.
கடந்த மாதம் உடல் சோர்வு காரணமாக தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த வாரம் அவருக்கு தலை வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மனோரமாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
மனோரமாவுக்கு நடைபெற்ற அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரண்டு நாள்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்
Comments
Post a Comment