ரிஸானாவை விடுதலை செய்யுமாறு அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் காரங்களைப் பிடித்து கண்ணீர்


சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ரிஸானா நபீக்கின் வழக்கு விசாரணை பிராந்திய நீதிமன்றத்தில் இருந்து மன்னரின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இத்தகவலை சவூதி அரேபியா சென்றுள்ள ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. அங்கிருந்து நேற்று அறிவித்தார்.
ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சவூதி உயர்மட்டத்தினரைச் சந்திக்க சென்றுள்ள இலங்கைக் குழு ரியாத்தில் இருந்து 520 கிலோமீற்றர் தூரத்திலுள்ள அல்தலாதீ மாநிலத்துக்குச்சென்று மரணித்த குழந்தையின் நெருங்கிய உறவினர்களைச் சந்தித்தது. ரிஸானாவை எந்த வகையிலாவது விடுதலை செய்யுமாறு இக்குழு கேட்டுக் கொண்டது. முதன் முதலில் இக்குழு ரியாத்தில் மரணமுற்ற குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசியது.
இக்குழுவில் சென்றிருந்த ஆளுநர் எஸ். அலவி மெளலானா மரணித்த குழந்தையின் உறவினர்களின் காரங்களைப் பிடித்து கண்ணீர் மல்கிய நிலையில் ரிஸானாவை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அல்தலாதீ மாநில நீதிமன்றத் தலைவர் ஷேக் கபீர் முஹம்மத் ரைஹான் அல் அஸாரியையும் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தவ்பீக், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிஸங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, வெளிவிவகார அமைச்சின் மேலதி செயலாளர் ஐ. எம். அன்ஸார் மெளலவி தாkம், மெளலவி ஸரூக், ஐ. ஆர். ஓ. பிரதிநிதி இம்ரான் ஜமால்தீன் ஆகியோரும் குழுவில் இடம்பெறுகின்றனர்.
தான் பணியாற்றிய வீட்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை ரிஸானா நபீக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சவூதி அரேபிய நீதிமன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி தூக்குத் தண்டனை வழங்க தீர்ப்பளித்தமை தெரிந்ததே.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்