சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை..!



நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு துரிதமாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும் நீதிமன்றங்களைத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 8 இலட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடப்பதாக நீதியமைச்சர் அதாவுட செனவிரட்ன தெரிவித்துள்ளார். வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் நிலவுவதால் மனுதாரர்களும் பிரதிவாதிகளும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். ஒத்திவைக்கப்படும் வழக்குகள் தொடர்பில் ஆராயவும் நீதிமன்றங்களில் விசேட நடவடிக்கையினை பின்பற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலுவை வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்காக மேலதிக நீதிமன்றங்களை இரு வருடங்களுக்கு முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்