புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை!

  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


உலக இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.


ஹஜ்ஜூப் பெருநாளானது தியாகத் திருநாளாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.

ஹஜ்ஜூப் பெருநாட்களில் ஏழைகள் முதல் அனைவருக்கும் உணவளிப்பது சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது.

ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் காலையில் நீராடி புத்தாடைகள் அணிந்து நறுமணம் பூசி பள்ளிவாசலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கமாகும்.


புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி கல்முனைக் கடற்கரை முற்றவெளியில் விசேட தொழுகை வழிபாடு நேற்றுக்காலை இடம்பெற்றது.

மௌலவி எம்.சபீர் தலைமையில் தொழுகை இடம்பெறுவதையும் பங்குபற்றிய ஏராளமான ஆண்பெண் இருபாலாரையும் படங்களில் காணலாம்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்