கல்முனை நீலாவனை சுனாமி மாடி வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள வீட்டொன்றில்
ரூபா 5 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு போயுள்ளதாக கல்முனை
குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். .சதாத் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு வீட்டு நபர்கள் உறங்கிய பின்னர் ஜன்னலை உடைத்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்படவுள்ளது என அறிய முடிகின்றது முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் செயற்பாடுகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கும் முகமாகவே இவ்வலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது இதன் இரண்டாவது பிராந்திய அலுவலகம் புத்தளத்தில் திறக்கப்படும் என்று வேறு சில தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது காத்தான்குடி பிராந்திய அலுவலத்தின் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 இற்கு மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் அரபு கலாசாலைகள் நன்மையடையும் என எதிர்பார்க்க படுகின்றது விரிவாக பார்க்க எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிராந்திய அலுவகத்தை திறந்து வைப்பார் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் இயங்கவுள்ளதுடன், இப்பிராந்திய அலுவலகத்த்திற்கென உதவி பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப...
கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இருக்க வேண்டுமென்று சாய்ந்தமருது மக்கள் சற்றுமுன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கல்முனை மாநகர முதல்வர் பதவியினை இராஜினாமா செய்வது தொடர்பாக சாய்ந்தமருது மக்களின் கருத்துக்களை கேட்டறியும் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்முனை மாநகர முதல்வராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்து இருக்க வேண்டும், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை (பிரதேச சபை) ஒன்றினை பெற்றுக் கொள்ளல், 35 வருடத்திற்கு பிறகு கிடைத்த முதல்வர் பதவியினை முழுமையாக அனுபவிப்பதற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு சாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கட்சித் தலைமையுடன் பேசுதல், ஊரின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் பேசி சாதகமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என உள்ளடங்களாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட...
Comments
Post a Comment