துறைமுக அதிகார சபை ஊழியர் முச்சக்கர வண்டி விபத்தில் பலி

கொழும்பில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்த துறைமுக அதிகார சபை ஊழியர்  முச்சக்கர வண்டி விபத்தில் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இவர் கல்முனைகுடியை  சேர்ந்த 36 வயதுடைய முகம்மது ஜாபீர் என்பவராவார்.
தனது குடும்பத்தவருடன்  கொழும்பில் இருந்து கல்முனைக்கு சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு ஊரணி எனும் இடத்தில இன்று காலை 4.00 மணிக்கு மரத்துடன் முச்சக்கர வண்டி மோதுண்டு இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தில் மரணித்தவரின் மனைவி இரண்டு பிள்ளைகளும் படு காயம் அடைந்துள்ளனர்.மரணித்தவரின் ஜனாசா  இன்று இரவு கல்முனை கடற்கரை பள்ளி மைய வாடியில் அடக்கம் செய்யப் பட்டது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்