மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு
அம்பாறை, சம்மாந்துறை மாவடிப்பள்ளி ஆற்றில் இன்று பிற்பகல் 3.30 அளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு வழமைபோல் மீன்பிடிப்பதற்காகச் சென்ற காரைதீவு நடராஜானந்தா வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய எஸ்.கனகரெத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment