சேனைக் குடியிருப்பு சேவோ நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவு விழா


கிழக்கு மாகாணத்தில் பல சமுக சேவை  அபிவிருத்தி பணிகளை செய்து  கொண்டிருக்கும் சேனைக் குடியிருப்பு  சேவோ நிறுவனத்தின்  10 ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கந்தையா சத்திய நாதன் தலைமையில் கல்முனை திரு இருதய நாதர்  மண்டபத்தில் நடை பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவும் ,கௌரவ அதிதியாக  சிரேஷ்ட தொழில் பயிற்சி  நிபுணர் ராமலிங்கம் சிவபிரகாசமும் கலந்து கொண்டனர்.

வைபவத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல்துறை சார்ந்த எட்டுப் பேர் சேவோ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், நாவிதன் வெளி பிரதேச செயலாளர் கலாநிதி .எம்.கோபாலரத்தினம், திருக்கோவில் பிரதேச செயலாளர் வீ.அழகரத்தினம் , ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லாவநாதன் , கல்முனை கார்மேல் பற்றிமா  தேசிய பாடசாலை அதிபர்  அருட் சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு ,சம்மாந்துறை உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடக வியலாளருமான வீ.ரீ. சகாதேவராஜா ,முகாமைத்துவ உதவியாளரும் ஊடக வியலாளருமான உமறுகத்தா முகம்மது இஸ்ஹாக் ஆகியோர்  கௌரவிக்கப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்