நற்பிட்டிமுனை வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்
நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக்கழகம் எதிர்வரும் 15, 16 திகதிகளில் “நற்பிட்டிமுனை வெற்றிக் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளதாக கழகத்தின் தலைவர் ஆஷிக் பர்வீன் தெரிவித்தார்.
ஒற்றுமை, சமாதானம், நட்பு என்பவற்றை விளையாட்டினூடாக ஏற்படுத்தும் நோக்குடன் நற்பிட்டிமுனை அஷ்ரஃப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (13) பிற்பகல் 4.30 மணிக்கு முன்னர் தலைவர் 15 ஏ, மத்ரசா வீதி, நற்பிட்டிமுனை எனும் முகவரியுடனோ அல்லது 0773764916 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும்.
அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணத்துடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment