சவளக்கடை அரிசி ஆலையை மீண்டும் இயங்கச் செய்ய கோரிக்கை






சவளக்கடை அரிசி ஆலையை மீண்டும் புனருத்தாரணம் செய்வ துடன் நெற்கொள்வனவுப் பணி களை ஆரம்பிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகளை சந்திக்க வேண்டுமெனும் தீர்மானம் முஸ் லிம் சமாதான செயலக மாதாந் தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக் கப்பட்டுள்ளது.
செயலக தவிசா ளர் எம்.எச். யாக்கூப், பணிப்பாளர் முபீதா உஸ்மான், உட்பட செயலக பிரதேச அங்கத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
அரிசி ஆலை எல்லை விபரம் மற்றும் புனருத்தாரணம் செய்வதற்கான நிதி தொடர்பாக நாவிதன் வெளி பிரதேச செயலாளரை சந்திப்பதற்கென கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். பிர்தெளஸ், ஆசிரிய ஆலோசகர் எஸ். சிறா ஜுதீன் ஆகியோர் நியமிக்கப்பட் டனர்.
இதேவேளை ஒலுவில் துறைமுக அபிவிருத்தி அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக மாகாண உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சந்தித்து கலந்துரையாடுவதெனவும் இதற்கென விசேட குழுவொன்றும் அமைக்கப்பட்டது. அதிபர் ஜனாபா காதர், சட்டத்தரணி ஜனாபா எம் றபாய்தீன், முன்னாள் அரச அதிபர் ஏ.எல்.
இப்றாலெவ்வை, அமைச்சர் அதாஉல்லாவின் இணைப்புச் செய லாளர் ஏ.பி.தாவூத், விரிவுரையாளர் சபீனா, சட்டத்தரணி யூ.எல்.எம். நிசார், சிரேஷ்ட விரிவுரையாளர் நசீர்  அஹமட், செய்தியாளர்களான சுல்பிகா ஷரீப், ஐ. எல்.எம். றிஸான் உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்