கிழக்கு மாகாணசபையின் வரவேற்பும் பிரியாவிடையும்.




கிழக்கு மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்வர்களுக்கான பிரியாவிடையும் ஊள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வும் கிழக்கு மாகாண சபையினால் நேறு;று ஏற்பாடு செய்யப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஏ. எச். எம். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சராக இருந்த எம். எல். எல். எம் ஹிஸ்புல்லா, எதிர்க் கட்சித் தலைவர் பசீர் சேகுதாவுத், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம். டி. ஏ. எம். குணவர்த்தன, எதிர்கட்சி உறுப்பினர் தௌபீக் ஆகியோருடன் அபையின் செயலாளராகவிருந்த ஆர். தியாகலிங்கம் ஆகியோருக்கான பிரியாவிடையும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சரான ஏ. எல். எம் அதாவுல்லாஹ் மற்றும் புதிய உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் திருமலை வெல்கம் கோட்டலில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் சந்திரகாந்தன், அமைச்சரர்களான எம். எஸ். உதுமாலெவ்வே, விமலவீர திஸாநாயக்க, து. நவரெட்ணராஜா,மகாண சரை உறுப்பினர்கள், பிரதம செயலாளர் வீ. பி. பாலசிங்கம், அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்