எதிர்வரும் யூன் 6ந் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட
குழுவினர் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு பயணமொன்றை மேற்கொள்ள உள்ளனர்.
கேரளா மாநில அரச நிர்வாகம் மற்றும் கட்டமைப்பு விடயங்களை நேரடியாக
பார்வையிட்டு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளுக்கு அவ் அனுபவங்களை
பயன்படுத்தும் நோக்கில் இவ் ஐந்து நாள் பயணம் யூ. என். டீ. பி. நிதி
அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப்
பேச்சாளரும், அமைச்சருமான எம். எஸ். உதுமா லெவ்வை கூறினார்.
கிழக்கு மாகாண சபையின் 35 உறுப்பினர்களும் மூன்று குழுக்களாக கேரள
மாநிலத்திற்கான பயணத்தை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி மற்றும் 20ம்
திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் உதுமா லெப்பை
மேலும் கூறியுள்ளார்.
Comments
Post a Comment