காரைதீவுப்பிரதேசத்தில் மீண்டும் கடற்படை முகாம்.
காரைதீவுப்பிரதேசத்தில்
மீண்டும் கடற்படை முகாம் அமைக்கப்படுவதற்கு அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொ.பியசேன கடும் அதிருப்தி
தெரிவித்துள்ளார். முன்னர் அகற்றப்பட்ட முகாம் மீண்டும் அமைக்கப்படுவது
மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தம் முடிந்து
அமைதி திரும்பியுள்ளது எனக்கூறும் அரசுதற்போது காரைதீவில் மினிமுகாம்
அமைப்பது எதற்காக? இந்நடவடிக்கை மக்களை பீதிகொள்ளச்செய்துள்ளது.மக்கள்
இப்போதுதான் ஓரளவு நிம்மதியடைந்துள்ளார்கள்.இந்நிலையில் இப்போது ஏன் இந்த
முகாம்.சுவாமிவிபுலானந்தர் பிறந்த மண்ணில் கடலைப்பயன்படுத்தி தொழில்
செய்பவர்கள் சிறுதொகையினரே எனச்சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்
குறிப்பிட்ட முகாமை அகற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரியநடவடிக்கை
எடுக்க வேண்டுமெனவும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment