திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழ், முஸ்லிம் விவசாயிகளின் காணிகளை அத்துமீறி அபகரித்துள்ள சிங்கள மக்களை வெளியேற்றுமாறு மாவட்ட செயலர் உத்தரவு


திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேசத்திற்கு உட்பட்ட படுகாடு, முதலைமடு பகுதிகளில் பன்னெடுங்காலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் விவசாயத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர். அம்மக்களால் பல வருடகாலமாக விவசாயம் செய்கைபண்ணப்பட்டுவந்த வயல் காணிகளை அப்பிரதேசத்தில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மத குரு ஒருவரினதும், பெரும்பான்மை அரசியல்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரினதும் அனுசரணையுடன் தமிழ் முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிங்கள மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளர் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலாளர் தலமையில் மூதூர் மற்றும் சேருநுவர பிரதேச செயலாளர்களின் பங்குபற்றலுடன் சேருநுவர பிரதேச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தங்களது பாரம்பரிய காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபடுவதாகவும் இவர்களை வெளியேற்றி தங்களின் காணிகளை பெற்றுத்தறுமாறு திருகோணமலை மாவட்ட செயலாளரிடம் வேண்டியிருந்தனர்.
இதற்கிணங்க திருகோணமலை மாவட்ட செயலாளர் இன்று நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பிலேயே அத்துமீறி தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரித்துள்ள சிங்கள மக்களை வெளியேற்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படின் பொலிஸாரின் உதவியைப் பெறுமாறும் அவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்