சாதனை விருது

கல்முனை பற்றிமா மாணவன் ரிஷிகேசுக்கு  
கடந்த 2009 ஆம் ஆண்டு நடை பெற்ற கல்விப் பொது தரதர பத்திர சாதாரண தர பரீட்சையில் 9A தர சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் நான்காம் இடத்தையும் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் மாவட்ட மாட்டத்தில் முதலாம் இடத்தையும் அடைந்து
கல்முனை கல்வி வலயத்திற்கும், கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கும் பெருமை தேடி கொடுத்த செல்வன் வரதராஜன் ரிஷிகேஷ் என்ற
மாணவனுக்கு புதன் கிழமை M.R.C நிறுவனத்தின் சமுக சேவை  பிரிவு பாராட்டு வழங்கி கௌரவித்தது.
நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் நடை பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் ,கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியு உட்பட கல்முனை பிர தேச கல்விமான்கள் பலர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்