நகரமற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் மட்டும் தொகுதி வாரியாக நடைபெறும்!
இலங்கையில் நகர மற்றும்
மாநகர சபைகளுக்கான தேர்தல்கள் மட்டும் தொகுதிவாரியாக இடம்பெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து உள்ளூராட்சி
மன்றங்களினதும் தேர்தல்களை தொகுதிவாரியாக நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள்
காணப்படுவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. எனவே மாநகரசபை மற்றும்
நகரசபைகளினது தேர்தல்களை மட்டும் தொகுதிவாரியாக நடாத்தி ஏனைய பிரதேச
சபைகளினது தேர்தல்களை வழமையான விருப்புவாக்கு தெரிவு முறையில் நடத்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரி அடிப்படையில் ஒருகட்சியிலிருந்து
1வேட்பாளர் மட்டுமே போட்டியிட முடியும் என்பது குறிப்பிடதக்கது
14மாநகரசபைகளுக்கும் 38 நகரசபைகளுக்கும் இவ்வாறு தேர்தல் நடத்தப்படவுள்ளது
என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment