இலங்கையில் எய்ட்ஸ்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது
இலங்கையில் உயிர்கொல்லி நோயான
எய்ட்ஸ் வெகுவாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இந்த
2010ம் ஆண்டில் முதல் மூன்று மாதத்தில் மட்டும் இந்நோயால் 6பேர்
உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது தேசிய எய்ட்ஸ்
கட்டுப்பாட்டுத்திட்டத்தின் புள்ளிவிபரங்களின்படி இந்த ஆண்டில் முதல்
மூன்று மாதங்களில் எய்டஸ் நோயை உருவாக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள
1223பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 313பேருக்கு எய்ட்ஸ்நோய்
உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 212ஆண்களும் 101பெண்களும்
அடங்குகின்றனர். 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த ஆண்டில் இந்த வைரஸ்
தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது கடந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில்
3பேர் மட்டுமே இந்நோயால் இறந்தனர் இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்கு
ஆகியுள்ளது 2009ம் ஆண்டு முழுமையானதுமான புள்ளிவிபரத்தின்படி 16பேரே
மொத்தமாக உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது.
Comments
Post a Comment