கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைய்திய சாலையில் பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலையம் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் திறந்து வைக்கப்படுள்ளது.
தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் அமைச்சர் என் . எஸ் .எஸ் . அமீர் அலி நியமிக்கபட்டுள்ளார் கைத்தொழில் வணிக அமைச்சர் ரிஷாத் பதியதீன் அவருக்கான நியமன கடிதத்தை நேற்று அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது கையளித்துள்ளார் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பொது செயலாளர் சட்டத்தரணி வை .எல் .எஸ் ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் முன்னால் அமைச்சர் அமீர் அலி அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார் இவரின் தோல்விக்கு அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறக்க பட்டமை காரணமாக தெரிவிக்கபட்டது குறிபிடத்தக்கது
முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்படவுள்ளது என அறிய முடிகின்றது முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் செயற்பாடுகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கும் முகமாகவே இவ்வலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது இதன் இரண்டாவது பிராந்திய அலுவலகம் புத்தளத்தில் திறக்கப்படும் என்று வேறு சில தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது காத்தான்குடி பிராந்திய அலுவலத்தின் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 இற்கு மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் அரபு கலாசாலைகள் நன்மையடையும் என எதிர்பார்க்க படுகின்றது விரிவாக பார்க்க எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிராந்திய அலுவகத்தை திறந்து வைப்பார் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் இயங்கவுள்ளதுடன், இப்பிராந்திய அலுவலகத்த்திற்கென உதவி பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப...
மட்டக்களப்பு கரடியனாறு இன்று காலை 11.30 அளவில் ஜும்மாஹ் தொழுகைக்கு சற்று முன்னர் கரடியனாறு போலீஸ் நிலையத்தில் களஞ்சியப் படுத்தி வைக்கபட்டிருந்த சீனா கட்டிட நிர்மான பணியாளர்களின் வெடிமருந்துகள் வெடித்ததில் 62 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன போலிஸ் நிலையம், அதிரடி படை முகாம், கமநல சேவைகள் நிலையம் என்பனவும் முற்றாக சேதமடைந்துள்ளது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன உயிரிழந்தவர்களில் இரண்டு சீன பிரஜைகளும் ஏராவூரை சேர்ந்த ஐயூப் கான் என்ற பொலிஸ் உத்தியோகர்தவரும் அடங்குவதாகவும் அறிய முடிகின்றது பிந்திய செய்தி சற்று முன்னர் வரையும் 27 உடல்கள் மாத்திரம் சிதைந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. படங்களை பார்க்க
Comments
Post a Comment