Posts

Showing posts with the label விபத்து

நிவாரணப் பணிகளில் ஈடு படுவோர் பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணங்களை அறவிடவும்

Image
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் வேண்டுகோள்  அனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ள வெளி மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளவர்கள் குழுக்கள் ரீதியாக செயற்படாமல் ஒன்று  பட்டு செயல் படுமாறு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார்  தெரிவித்துள்ளார் . கல்முனை பிரதேசத்தில் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக நிவாரணம் திரட்டும் பணிகளில் பலர்  குழுக்களாக செயல் படுகின்றனர்  இதனை தவிர்த்து பிரதேச செயலாளர்கள் ஊடாக நிவாரணப் பொருட்களை திரட்டி உரியவர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவும். குழுக்கள் ரீதியாக செயல் படுவதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன . இதனால் குழுக்களுக்கிடையில் குழப்பங்கள் ஏற்படுகின்றது . எனவே  உதவும் நோக்கத்தில்  செயல் பட விரும்புபவர்கள் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராம சேவை உத்தியோகத்தர்களை பயன் படுத்தி நிவாரணங்களை திரட்டுமாறு பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் அனைவரிடமும் கேட்டுள்ளார் . 

சாய்ந்தமருதில் குண்டு தாக்குதல் இருவருக்கு காயம்

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தின் பின்னாலுள்ள குவாட்டஸ் ஒழுங்கையில் அமைந்துள்ள 870-ஆம் இலக்க வீட்டின் மீது இன்று  சனிக்கிழமை (14) அதிகாலை 2.30 மணியளவில் உள்நாட்டு தயாரிப்பிலான (அணைப்பு) குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தரான அப்துல் சலாம் அஸ்வரின் வீட்டின் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் முன் அறை சேதமடைந்துள்ளதுடன் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த அஸ்வரின் தந்தையும் தாயும் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கல்முனைப் பொலிசாரும் இராணுவத்தினரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மின் ஒழுக்கு காரணமாக கல்முனை வீடொன்றில் தீ

Image
கல்முனை கடற்கரைப் பள்ளி வாசலுக்கு பின் புறமாக அமைந்துள்ள வீடொன்றில் சற்று நேரத்துக்கு முன்னர்  மின் ஒழுக்குகினால் தீ ஏற்பட்டு மின்சாரப் பொருட்களும்  வீட்டின் மேற்பகுதியின் கூரைப் பகுதியும் தீப்பற்றி எரிந்துள்ளது . கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் விரைந்து செயற்ப்பட்டதினால் தீ கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது 

கல்முனைக்குடியில் வாகனங்களுக்கு தீவைப்பு ! கார் 01,மோட்டார் சைக்கள் 03 எரிந்து நாசம்

Image
( யு.எம்.இஸ்ஹாக் ) கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் ஒரே நேரத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று வாகனங்களுக்கு தீ வைக்கப் பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று  (10) அதிகாலை 2.00 மணிக்கு இடம் பெற்றதாகவும் இதன் போது வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் ஒன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும்  வாகன உரிமையாளர் ஜாபீர் என்பவர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக் குடி சாஹிபு வீதியில் வசிக்கும் வர்த்தகரான ஏ.எம்.ஜபீர் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களே  இனந்தெரியாதோரால் இவ்வாறு தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. தீயினால் வீட்டின் முன் பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டதால் வீட்டுக்கு ஏற்படவிருந்த பாரிய சேதம் தவிர்க்கப் பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையில் வி

சம்மாந்துறை வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர்.  சம்மாந்துறை வங்களாவடியில் இன்று அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார் அம்பாரையிலிருந்து கல்முனை நோக்கி வந்து  கொண்டிருந்த கனரக லொறியொன்று  மாட்டு வண்டிலுடன் மோதுண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. சம்மாந்துறை விளிணியடியைச்சேர்ந்த அப்துல் குத்துாஸ் (வயது 52) என்பவரே உயிரிழந்தவராவார் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 

மருதமுனை அஸ்பாக் மௌலானா என்பவர் கல்லாற்று வாகன விபத்தில் பலி

Image
 பீ.எம்.எம்.ஏ காதர்>யு.எம்.இஸ்ஹாக்  மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் இன்று சனிக்கிழமை  இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோட்டைக்கல்லாறு பாடசாலைக்கு அருகில் பயணித்த தனியார் பேரூந்து மற்றுமொரு பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதமுனையை சேர்ந்த 30 வயதுடைய காசிம் மௌலானா அஸ்பாக் மௌலானா என்பவர்  உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.> இந்நிலையில் தனியார் பேரூந்துகளிடையேயான போட்டித் தன்மையே இந்த விபத்திற்கு காரணம் என விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தை அடுத்து குறித்த இரண்டு பேரூந்துகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திய பேரூந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம்

Image
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கடந்த பத்து மாத காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற தண்டனைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.சி.பீ.கே.டி சில்வா தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான 10 மாத காலப்பகுதியில் மது போதையுடன் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 272 முறைப்பாடுகளும் 56 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டில் பத்து மாத காலப்பகுதியில் மது போதையுடன் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 59 முறைப்பாடுகளும் 98 வீதி விபத்துக்களும் பதிவாகியுள்ளன என்றார். மேலும் இவ்வாறான குற்றங்கள் மற்றும் விபத்துக்களைத் தடுக்க பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், பொதுநல அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஒலுவிலில் இரு வேறு விபத்துகளில் இருவர் பலி

Image
அக்கரைப்ற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை துறைமுக வீதியில் இன்று (01) நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   உயிரிழந்தவர் ஒலுவில் 05ஆம் பிரிவைச்சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான ஓய்வு பெற்ற அதிபர் எம்.எம். இஸ்மாயில் (63) என்பவராவார்.   குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அட்டாளைச்சேனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில், அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின், ஒலுவில் துறைமுக பிரதான வீதிக்கு திரும்பும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.    பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற மனைவியும் குழந்தையும் படுகாயங்களுக்குள்ளாகி பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.   இதேவேளை இன்று (01) அதிகாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியின், ஓலுவில் பிரதேசத்திலுள்ள திராய்க்கேணி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.   அக்கரைப்பற

சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷல் காசிமின் வாகனம் விபத்து

Image
சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷல் காசிமின் இணைப்புச் செயலாளர் கபீர் என்பவர் பயணித்த வாகனம் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு  செல்லும் வழியில்  சற்று நேரத்துக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி காயங்களுடன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

09 மாதங்களில் வீதி விபத்துக்களால் 2,200 பேர் உயிரிழப்பு!

Image
இவ்வாண்டின் முதல் 09 மாதங்களில் மட்டும் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,200 க்கும் அதிகமாக பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 349 உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றது. கடந்த வருடத்தில் 2014 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் 36,050 பேர் எனவும் அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,440 எனவும் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் வீதிவிபத்துக்களில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 2,260 எனவும் மற்றைய 6,847 பேர் கடுமையான காயத்துக்குள்ளாகி உயிர் பிழைத்தவர்களாவார். ஆனால் 2015 ஆம் ஆண்டில் முதல் 09 மாதங்களிலேயே 2,200 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வீதிவிபத்துக்களால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றமை கவனித்துப் பார்க்க வேண்டியதொரு விடயமாகும். எனவே வீதி விபத்துக்களை குறைத்து அதன் மூலம் உயிரிழப்புக்களை குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தேசியத்தின் அவசியமாகும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தேசிய வீதி பாதுகாப்பு கவுன்சில் அலுவலர்கள

மருதமுனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம்

Image
சற்று நேரத்துக்கு முன்பாக மருதமுனையில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . மருதமுனை  பிரதான வீதியில் அதாவுல்லாஹ் கலர் மிக்ஸ் முன்பாக முச்சக்கர வண்டியும் மோட்டார் சைகள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது 

கல்முனையில்இடம் பெற்ற மோட்டார் சைகள் விபத்தில் இருவருக்கு பலத்த காயம்

Image
கல்முனை நகரின்  மத்தியில் அக்கரைப்பற்று - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஒரு  வழிப் பாதையில் ஒரே பக்கமாக பயணித்த இரு மேட்டார் சைக்கில்கள் நேற்று மாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவரின் கால் ஒன்று  இரண்டாக முறிந்த  நிலையில் விபத்துக்குள்ளான இருவரும்  கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டனர். விபத்துக்குள்ளான இருவரும் ஆபத்தான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு  கால் முறிந்தவர்  மேலதிக சிகிச்சைக் காக  மட்டக்களப்பு  போதனா  வைத்திய சாலையில்  சிகிச்சை  பெற்று வருவதாகவும் விபத்துக்குள்ளான மற்றையவர்  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில்  சிகிச்சை பெற்று வுவதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் தீ 15 அங்காடி கடைகள் கருகி நாசம்

Image
அம்பாறை - டீ.எஸ். சேனாநாயக்க வீதியில் உள்ள ஆடை அங்காடியில் இன்று காலை தீ பரவியது. இதில் அங்காடியில் இருந்த 15 கடைகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் சேதமடைந்த சொத்து விபரங்கள் இன்னும் கணிக்கப்படவில்லை. அம்பாறை நகர சபையின் தீயணைப்பு படையினர், காவற்துறை மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். 

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி!

Image
அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி இஸ்தலத்தில் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி

Image
திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் 16 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர  பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  மற்றும் மணல் வியாபாரியான எம்.கலீல் (48) ஆகியோரே வபாத்தாகியுள்ளனர் காத்தான்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை வேன் ஒன்றில் கிண்ணியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது சேருநுவர எனும் பிரசேத்தில் வைத்து இவர்கள் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. படுகாமடைந்த மூவரும் அருகிலிருந்த சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி எம். கலீல் (48) என்பவர் சிகிச்சை பயனின்றி வபாத்தானார் ஏனைய இருவரையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு வைத்து காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (வயது 52) வபாத்தானார் படுகாயமடைந்த முஹம்மது புகாரி (வயது 53) தொடர்ந்தும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்துச் சம

கிழக்கு முதலமைச்சர் வாகனத் தொடரணி விபத்து; நால்வர் காயம்

Image
கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு ரெதீதென்ன எனுமிடத்தில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று மாலை மட்டக்களப்பு, பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான ரெதீதென்னையில் நடந்த சுயதொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்புகையில் இவ்விபத்து சம்பவித்துள்ளது. முன்னால் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த வாகனம் அப்போது மழைத்தூறல் காணப்பட்டதால் வீதியிலிருந்து வழுக்கி அருகிலிருந்த பஸ் தரிப்பிடத்தில் மோதியுள்ளது. அந்நேரம் அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த தாயும் மகளும் விபத்தில் காயமடைந்துள்ளனர். புணாணைக் கிராமத்தைச் சேர்ந்த சாமித்தம்பி சறோசா (வயது 25) மற்றும் அவரது 6 மாதக் கைக் குழந்தையும் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகளின் வாகன

கல்முனையில் வாகன விபத்து ஒருவருக்கு பலத்த காயம்

Image
கல்முனையில் சற்று நேரத்துக்கு முன்னர் இடம் பெற்ற விபத்தில் ஒருவருக்கு காயம். கல்முனையில் இருந்து சம்மாந்துறைக்கு காரில்  சென்ற நகை கடை  உரிமையாளர் ஒருவரும், கல்முனையை சேர்ந்த மோட்டார் சைக்களில்  வந்த மற்றுமொருவருமே  விபதுக்குள்ளாகியுள்ளனர் . மோட்டார் சைக்களில்  வந்த  கல்முனை குடியை சேர்ந்த ஜவாஹிர் காரில் சென்ற பசீர் என்பவரும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்களில்  வந்தவர்  வேகத்தை கட்டுப் படுத்த முடியாமல்  காரில் மோதியதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. மோட்டார் சைக்கள்  மோதியதில் காரின் முன்பக்க டயர் பாரிய சத்தத்துடன் வெடித்ததாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர் . இந்த சம்பவம் கல்முனை  கட்டையடி ஹனிபா ஹோட்டல் முன்பாக இடம் பெற்றுள்ளது . சம்பவத்தில்  காயமடைந்தவர் ஏற்கனவே விபத்தொன்றில் சிக்கி இடது கால் க்சத்திர சிகிச்சை செய்யப் பட்டதென்றும் .தற்போது இடம் பெற்ற விபத்தில்  வலதுகால் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது . காயமடைந்தவர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் . சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிசார் விசாரணைகளை