Posts

Showing posts with the label சுதந்திரம்

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் 68வது சுதந்திர தின நிகழ்வு

Image
(எம்.எம்.ஜபீர்) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம் தலைமையில் இன்று காலை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பிரதேச செயலகத்திற்கு முன்பாக தேசியக்கொடி ஏற்றி, உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், கலைக்கலாச்சார  நிகழ்வுகளும் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலக  உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ஹூஸைமா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

கல்முனை மாநகர சபை சுதந்திர தின நிகழ்வு

Image
(  அப்துல் அஸீஸ்) இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை யொட்டி கல்முனை மாநகர சபை  ஏற்பாடு செய்த    சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(04)    மாநகர சபைமுற்றத்தில் இடம்பெற்றது.   கல்முனை மாநகர  பிரதி மேயர் எ. எல்.எ. மஜீட் தலைமையில்      நிகழ்வுகள்   இடம் பெ ற்ற நிகழ்வில் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர் 

கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகள்

Image
ஏ.பி.எம்.அஸ்ஹர்,  அப்துல் அஸீஸ் இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை யொட்டி கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட   சுதந்திர தின நிகழ்வுகள் இன்று(04)  பிரதேச செயலக வளாகத்தில்  இடம்பெற்றது.  பிரதேச செயலாளர் எச்.எம்.முகமட் கனி,   தலைமையில்      நிகழ்வுகள்   இ டம்பெற்றன.இதில்   பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் நடை பெற்ற தேசிய சுதந்திர தின விழா

Image
68வது  தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி ,பிரதமர்  உள்ளிட்ட  நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு துஆ பிரார்த்தனையும் , நினைவு தின மர  நடுகை வைபவமும் , மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  வழங்கும்  நிகழ்வும்  நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  பழைய மாணவர் சங்கத்தின்  ஏற்பாட்டில்  இன்று நடை பெற்றது . வித்தியாலய அதிபர்  ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர் பீட உறுப்பினரும்  கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.முபீத்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  தேசியக் கோடி ஏற்றி  தனது தந்தையின் நினைவாக நிர்மாணிக்கப் பட்ட கொடிக்கம்ப மேடையையும் திறந்து வைத்தார்  இவ்வைபவத்தில்  பிரதி அதிபர் ,ஆசிரியர்கள்  உட்பட  பெற்றோரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில்  சமுக சேவை அமைப்பின் தலைவருமான  சி.எம்.ஹலீம் மற்றும் அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட முக்கிய பிர

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய புதிய கொடிக்கம்ப மேடை திறப்பு விழாவும் தேசிய சுதந்திர தின வைபவமும்

Image
நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய  பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுதலுக்கு இணங்க  மர்ஹூம் ஏ.எல்.கரீம் (பதிவாளர்)  அவர்களின் நினைவாக  பாடசாலையில் கட்டி முடிக்கப் பட்ட  கொடிக்கம்ப மேடை  தேசிய சுதந்திர தினமான நாளை தேசியக் கொடி  ஏற்றி திறந்து வைக்கப் படவுள்ளது. வித்தியாலய அதிபர்  ஜெஸ்மினா ஹாரீஸ் தலைமையில்  இடம் பெறவுள்ள நிகழ்வில்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதோச நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  உயர் பீட உறுப்பினரும்  கல்முனை தொகுதி அமைப்பாளருமான சி.எம்.முபீத்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு  நாளை  வியாழக் கிழமை 04.02.2016  திறந்து வைக்கவுள்ளார் . இவ்வைபவத்தில்  பிரதி அதிபர் ,ஆசிரியர்கள்  உட்பட  பெற்றோரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கல்முனை தொகுதி இளைஞர்  காங்கிரஸ் அமைப்பாளரும்  நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவருமான  சி.எம்.ஹலீம் மற்றும் அமைப்பின் செயலாளர் யு.எல்.எம்.பாயிஸ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதன் போது  தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு

68வது சுதந்திர தின வைபவத்தையொட்டி விசேட நிகழ்வுகள் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில்

Image
கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய 68வது  சுதந்திர  தின வைபவத்தையொட்டி விசேட நிகழ்வுகள்  இன்று (03)  பாடசாலைகளில்  நடை பெற்றது.  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட  பாடசாலைகளின்  பிரதான நிகழ்வு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடை பெற்றது .  கல்லூரி அதிபர் எம்.சி.எம் .அபூபக்கர்  அவர்களின்  நெறிப்படுத்தலில்  வலயக் கல்வி அலுவலக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை.அரபாத் தலைமையில்  நடை பெற்ற  நிகழ்வில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக்  கொடி யை ஏற்றி வைத்தார்  . வலயக் கல்விப் பணிப்பாளர் அப்துல் ஜலீல் ,பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான  வீ.மயில் வாகனம் , எஸ்.எல்.ஏ.ரஹீம் ,கணக்காளர்  எல்.ரீ.சாலிதீன் ,நிருவாக உத்தியோகத்தர் திருமதி  ஜீ .பரம்சோதி  உட்பட  ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்  ,கல்லூரி  ஆசிரிய ர்கள் ,மாணவர்கள்  என பலர் கலந்து கொண்டனர் . வலயக் கல்விப் பணிப்பாளர்  அப்துல் ஜலீல்  , பிரதிக் கல்விப் பணிப்பாளர்  பீ.எம்.வை அரபாத்  ஆகியோரால்  தேச விடுதலைக்காக  பாடு பட்டவர்களை

"அவளின் சந்தோசமே நாட்டின் சந்தோசம்" சர்வதேச மகளிர் தின வைபவம்

Image
அவளின் சந்தோசமே நாட்டின் சந்தோசம் என்ற தொனிப் பொருளில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமிய மகளிர் அபிவிருத்தி சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின வைபவமும் ,மகளிர் சுய தொழில் உற்பத்திக் கண்காட்சியும் சனிக்கிழமை  (15) பாண்டிருப்பு கலாச்சார மத்திய  நிலையத்தில் நடை பெற்றது. கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவ நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாகவும் சட்டத்தரணி ஜனாபா .ஆரிகா காரியப்பர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியையும், எமது நாட்டையும் ஆதரித்து கல்முனை முஸ்லிம் மக்களினால் கவனயீர்ப்பு பேரணி

Image
ஜெனீவா பிரேரனையில் ஜனாதிபதியையும், எமது நாட்டையும் ஆதரித்து கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணிஇன்று (14) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற உள்ளது. கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பிக்க உள்ள இந்தப்பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை செல்ல உள்ளது. கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல், கல்முனை நகார் ஜும்ஆ பள்ளிவாசல், கல்முனை அன்சாரி  சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமபாத் அக்பர்  ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட 21பள்ளிவாசல்கள், 3வார்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், 22சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், 18விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர்  எஸ்.எம்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்

சாய்ந்தமருதில் நாளை சுதந்திர தின ஏற்பாடு; மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலிருந்து விடுபட பிரார்த்திப்போம்!

Image
நாட்டின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது–மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பல்வேறு சுதந்திர தின நிகழ்வுகள் சாய்ந்தமருதில் நாளை இடம்பெறவுள்ளது. இச்சுதந்திர தின நிகழ்வுகள் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகள் நாளைக் காலை 8 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கபடவுள்ளதுடன் அன்றைய தினம் ஜூம்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதான நிகழ்வும், மரநடுகையும் மற்றும் நாட்டின் நிலையான சமாதானத்திற்கும், இன நல்லுறவை வலியுறுத்தியும் பள்ளிவாசலில் துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளதாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். சுந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகளில் தேசியக் கொடியினை ஏற்றுமாறும் அன்றைய தினம் எமது தாய் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிருந்து விடுபட ஐவேளை தொழுகையில் துஆப் பிரார்த்தனையிலும், விஷேட தொழுகையிலும் ஈடுபடு