Posts

Showing posts from December, 2019

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது

Image
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்ட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்

Image
அண்மையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட 32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் இன்று (09) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 01. எஸ்.எச். ஹரிஸ்சந்திர - நீர் வழங்கல் வசதிகள். 02. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க - நகர அபிவிருத்தி. 03. எஸ். சேனாநாயக்க - நீர்பாசன, கிராமிய அபிவிருத்தி. 04. எம்.சி.எல். றொட்ரிகோ - காணி மற்றும் காணி அபிவிருத்தி. 05. எஸ்.எச்.ஏ.என்.டீ. அபேரட்ன - பொருளாதாரம், கொள்கை அபிவிருத்தி. 06. பீ.கே.எஸ். ரவீந்திரா - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் 07. டீ.ஏ.டபிள்யூ. வணிகசூரிய- புகையிரத சேவைகள். 08. பேராசிரியர். சுனந்த மத்தும பண்டார- தகவல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பம். 09. டீ.எஸ். விஜெயசேகர - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை. 10. எல்.டீ. சேனாநாயக்க - சர்வதேச ஒத்துழைப்பு. 11. ஆர்.எஸ்.எம்.வி. செனவிரத்ன- சுதேச வைத்திய சேவைகள். 12. ஏ.எஸ். பத்மலதா- மகளிர், சிறுவர் அலுவல்கள். 13. கே.எச்.டீ.கே. சமரகோன்- மின்வலு. 14. எம்.ஏ.பீ.வ...

வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

Image
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை அடுத்து கல்முனைப் பிராந்தியத்தில்  ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும், காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுவதுடன் கொதித்தாறிய நீரை பருகுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும், இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் சுகாதார நிலமையினை கண்காணிப்பதற்கு கல்முனைப் பிராந்தியத்திற்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக சகல சுகாதார வைத்தியதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது, (அரசாங்க தகவல்...

மட்டக்களப்பில் இன்று அதிகாலை வழிப்பறி கொள்ளை - பொலிஸார் தீவிர விசாரணை

Image
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (08) அதிகாலை ஆயுதங்களுடன் வந்த சிலர் வழிப்பறி கொள்ளைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு ஆலையடி பகுதியில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்று அதிகாலையில் வீதியினால் பயணித்தவர்களை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், தொழிலுக்கு சென்றவர்கள் என பலரிடம் இவ்வாறு கொள்ளையிடப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை செயலான் வங்கிக்கிளையின் 8வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

Image
கல்முனை செயலான்  வங்கிக்கிளையின்  8வது  ஆண்டு நிறைவு  கொண்டாட்டம்  வங்கி முகாமையாளர் எஸ்.உதயகுமரன்  தலைமையில்  கடந்த புதன்கிழமை (04) சாய்ந்தமருது  சீ பிரீஸ்  மண்டபத்தில் நடை பெற்றது  முன்னாள் முகாமையாளர்  திருமதி பிறேமினி  உட்பட  வங்கி  ஊழியர்கள்  வாடிக்கையாளர்கள்  கலந்து கொண்டனர் 

கல்முனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மாலைதீவு பிரஜை கைது

Image
இலங்கையில் தங்குவதற்கான விசா கடவுச்சீட்டு எதுவுமின்றி சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த மாலைதீவு பிரஜை ஒரவர் கைதாகியுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள கடைதொகுதி ஒன்றில் குறித்த பிரஜை கடவுச்சீட்டு மற்றும் விசா ஏதுவும் இன்றி சந்தேகத்திற்கிடமாக தங்கி இருப்பதாக புலனாய்வு தகவல் ஒன்றை அடுத்து கைதாகியுள்ளார். கடந்த 7 ஆம் திகதி மாலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டாரவின் தலைமையின் கீழ் இயங்கும் கல்முனை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் வை அருணன் சார்ஜன்ட் ஏ.எல்.எம் றவூப் (63188) கான்ஸ்டபிள் கீர்த்தனன்(6873), ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபரான மாலைதீவு நாட்டை சேர்ந்த இப்ராஹீம் ரசீட் (வயது-54) என்பவரை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் மாலைதீவு நாட்டு அடையாள அட்டை ஒன்று தொலைபேசி ஒன்று ரெப் ரக உபகரணம் ஒன்று வைத்திய அறிக்கைகள் அடங்கிய தோல்பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் சட்டபூர்வமாக தங்கி இருப்பதற்கான எதுவித கடவுச்சீட்டோ குடிவரவு குடியகல்வு செய்வதற்கான விசாவோ அவர் வசம் இல்லை என்பதும் குற...