கல்வியியற் கல்லூரிக்கு தெரிவானோருக்கு நற்பிட்டிமுனையில் பாராட்டு
நற்பிட்டிமுனை மண்ணில் கல்வி மேம்பாட்டுக்கு உதவிவரும் அல் -கரீம் பவுண்டேசன் அமைப்பு முதற்தடவையாக நற்பிட்டிமுனையில் கல்விக்கல்லூரிக்கு தெரிவான 05 ஆசிரிய பயிற்சி மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கல்முனை ஜெயா ஹோட்டலில் நடை பெற்றது . நற்பிட்டிமுனையில் தரம் ஐந்து புலமைப்பரீட்சை ,சாதாரண மற்றும் உயர் தரப்பரீட்சைகளிலிலும் பல்கலைக்கழகம் செல்வோரையும்,உயர்பதவி பெறுவோரையும் பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வை தொடர்ந்து இவ்வருடம் முதல் கல்விக்கல்லூரிக்கு தெரிவானவர்களையும் பாராட்டுகின்ற நிகழ்வு இன்று 12.10.2019 சனிக்கிழமை இடம் பெற்றன அல் -கரீம் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம் பெற்ற இந்த பாராட்டு விழாவில் நற்பிட்டிமுனையை சேர்ந்த 05 மாணவர்கள் பாராட்டப்பட்டனர் எம்.எஸ்.எம்.சஜீர் (I C T -ஆங்கில மொழி ) பஸ்துன்ரட்ட கல்லூரி ,களுத்துறை. எச்.எம்.எம்.சஜான் ( கணிதம் - தமிழ் மொழி ) வவுனியா கல்லூரி எம்.ஐ.பார்ஹத் பார்ஹான ( கணி...