கல்முனை கடலரிப்பு தடைக் கற்களை சீராக ஒழுங்குபடுத்தி தருமாறு மக்கள் வேண்டுகோள்
நிப்ராஸ் மன்சூர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அண்மித்த கடற்கரை யோரத்தில் கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல தசாப்தங்களுக்கு முன்னாள் இடப்பட்ட பாரிய பாரங்கற்களை சீராக ஒழுங்குபடுத்தி தருமாறு பிரதேச அரசியல்வாதிகளிடம் பொது மக்கள் வேண்டுகின்றனர். குறித்த பள்ளிவாசலுக்கு அண்மித்து செல்கின்ற கிழக்கு கடற்கரை வீதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விஸ்தரிப்பு பணிக்காக நகர்த்தப்பட்ட கற்கள் கடற்கரையில் ஆங்காங்கே பரவிக் காணப்படுவதனால் ஒய்வு நேரங்களை கழிப்பதற்காக இங்கு வருகின்ற பொது மக்களுக்கு இது அசெளகரியங்களை ஏட்படுத்துவதுடன் கடற்கரையின் அழகிலும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடல் கொந்தளிப்பு காலங்களில் பாரிய கடல் அலைகளினால் இக் கற்கள் படிப்படியாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுமாக இருந்தால் இப் பிரதேசத்தில் பாரம்பரியமாக மேற்கொண்டுவரும் கரை வலை மீன்பிடி தொழிலிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதனால் இவ்விடயங்களை கருத்தில் எடுத்து விரைந்து செயற்படுமாறு பொது மக்கள் பிரதேச அரசியல் வாதிகளிடம் வேண்டுகின்றனர். மேலும் இது விடயமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நிற...