கஞ்சா கடத்திய பொலிஸ் அதிகாரிக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை


கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவருக்கு நஞ்சு மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் தண்டக்கோவை 54 ஆம் பிரிவின் கீழ் 25000 ரூபா தண்டப் பணமும் ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் கொண்ட தீர்ப்பு கல்முனை மேல் நீதி மன்றத்தில் நீதிபதி நவரத்தின மாறசிங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 
அத்திமலை வெள்ளவாய என்ற இடத்தைச் சேர்ந்த  யாப்பா முதியன்சலாகே யாப்பா திலக என்ற பொலிஸ் அதிகாரிக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 
மொணறாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது மொணறாகல நிதிமன்றில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமைபுரிந்த இவர்  2013.12.01ம் திகதி அதிகாலை வேளை 2கிலோ 519கிராம் கஞ்சாவை மொணறாகலையிலிருந்து தனது பயணப்பையில் மறைத்து பொத்துவில் பிரதேசத்திற்கு எடுத்து வந்தபோது பொத்துவில் பொலிசாரினால் உல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்து பொத்துவில் நீதிவான் நிதி மன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் . 
பொத்துவில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கு 2014.07.25ம் திகதி சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை  செய்த கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி  நவரத்தின மாறசிங்க இந்த தீர்ப்பை வழங்கினார் .
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக மேல் நீதிமன்ற சட்டத்தரணிகளான வீ.எச்.எஸ்.ஜேயசேகர ஏ.எல்.எம்.லியாகத்தலி மற்றும் இவ் வழக்கிற்கு எதிராக அரச சட்டத்தரணியான நுஸ்கி லத்தீப் ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர். குற்றவாளி  சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் இருவரும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்  தற்போது முல்லைத்தீவூ நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யும்  ஒரு பொலிஸ் அலுவலராக  கடமை செய்வதால் குறித்த தண்டனையை குறைத்துத்தருமாறு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாறசிங்கவிடம் சமர்ப்பணம் செய்தபோதும் அவர்களது கோரிக்கை நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டது. 
ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்  தனது கடமையிலிருந்து தவறி இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவது மன்னிக்கமுடியாது எனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறு குற்றத்தில் ஈடுபட்டவருக்கும் ஏனையவர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் எனவும் கூறி இந்த தீர்ப்பை வழங்கினார் .  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது