மே 31ம் திகதிக்கு முன் தேர்தல் நடைபெறலாம்?
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நடத்தப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2009ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் மே 31ம் திகதிக்குப் பின்னர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படக் கூடுமென நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.