உறவுக்கு பங்கமில்லாத உமா வரதனின் மோகத்திரை
பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் உலக சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜன் எழுதிய மோகத்திரை நூல் அறிமுக நிகழ்வு நேற்று (31) சனிக்கிழமை மாலை கல்முனை உவெஸ்லி கல்லூரி நல்லதம்பி மண்டபத்தில் நடை பெற்றது. டாக்டர் புஸ்பலதா லோகநாதன் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு முதற்பிரதியை வெளியிட்டு வைத்தார் உலக கவிஞர் சோலைக்கிளி நூலின் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார் நூலின் அறிமுகவுரையை சிவ வரதராஜனும் வெளியீட்டுரையை பேராசிரியர் சி.மௌனகுருவும் , நூல் பற்றிய கருத்துரை திரைப்பட இயக்குனர் ஏ.ஹஸீன் மற்றும் விரிவுரையாளர் பிரியதர்ஸினி ஜெதீஸ்வரன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது. ஏற்புரையை சிறுகதை எழுத்தாளர் உமா வரதராஜன் நிகழ்த்தினார் சமீப காலத்தில் கல்முனை பிரதேசத்தில் எழுந்துள்ள முறுகல் நிலைக்கு அப்பால் தமிழ் முஸ்லிம் உறவுக்குப் பங்கமில்லா நிகழ்வாக உமா வரதராஜனின் மோகத்திரை நூல் வெளியீட்டு விழா அமைந்திருந்ததும் கல்முனையில் இடம் பெற்ற இலக்கிய விழாவில் பெருந்தொகையான எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்தமையும்...