Posts

Showing posts from May, 2019

வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும்

Image
தங்களிடம் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் இருந்தால் அதனை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இன்று அல்லது நாளை தங்களிடம் உள்ள ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பாக ஜனாதிபதியிடம் மகிந்த அறிக்கை

Image
முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.  அவ்வறிக்கை எதிர்க்கட்சித் தலைவரினால் நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.  முன்னாள் பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் விமானப் படை தளபதி ரொஷான் குணதிலக்க, முன்னாள் கடற்படை தளபதி எட்மிரல் வசந்த கரன்னாகொட, எட்மிரல் ஜயநாத் கொழம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர்களான மஹிந்த பாலசூரிய, சந்ரா பெர்ணான்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் மேற்படி முக்கியஸ்தர்களுக்குமிடையில் சிறு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.  ஜனாதிபதி ஊடகப் பிரிவு

உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின் உடல்களும் அடக்கம்

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சாய்ந்தமருது பிரதேசத்தில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாதிகள் 10 பேரின்  உடல்களும் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை களின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு இன்றும் ஊரடங்குச் சட்டம்

Image
சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (01) இரவு 09.00 முதல் நாளை (02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காகவும் கடந்த 26 ஆம் திகதி மாலை முதல் அப்பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.  இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு ஆலோசனை

Image
இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை  இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம்  ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய தொலைக்காட்சி சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள சவுதி தூதரகமானது, ட்விட்டர் மூலம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சிச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக சவுதி அரேபியத் தூதரகம் தெரிவித்தது. உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில், 42 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட சுமார் 250 பேர் உயிரிழந்ததுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.